தலைமை செயலாளர் ராமமோகன ராவ் வீட்டில் நடத்தப்பட்ட சோதனைக்கும், மத்திய அரசுக்கும் எந்தசம்பந்தமும் இல்லை என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழக தலைமைசெயலாளர் ராம மோகனராவ் வீட்டில் வருமான வரித்துறையினர் நேற்று காலை முதல் அதிரடிசோதனை நடத்தினர். சென்னை அண்ணா நகரில் உள்ள அவரதுவீட்டிலும், அவரது மகன் விவேக் வீட்டிலும் சோதனை நடைபெற்றது.

மேலும் ராமமோகன ராவின் உறவினர்களின் வீடுகள் உள்ளிட்ட 13 இடங்களில் சோதனை நடந்தது. இதனை யடுத்து, தலைமை செயலகத்தில் உள்ள ராம மோகனராவ் அறையிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்தசோதனையில் பணம், நகைகள், சிலமுக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் இதுகுறித்து கருத்துதெரிவித்துள்ள பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக தலைமை செயலாளர் ராம மோகனராவ் வீட்டில் நடத்தப்பட்ட வருமானவரி சோதனைக்கும், மத்தியஅரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதில் அரசியல் எதுவும்இல்லை. வருமான வரித்துறைக்கு கிடைத்த தகவலின்படியே அவர்கள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர் என்றார்.

Leave a Reply