மத்திய அமைச்சர் கிரிராஜ்சிங் கொல்கத்தாவில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

ராமர்கோயிலை வங்கதேசம் அல்லது பாகிஸ்தானில் கட்டமுடியுமா என்பதற்கு அகிலேஷும் ராகுல் காந்தியும் பதில் அளிக்க வேண்டும். உத்தரப்பிரதேசத்தில் பாஜக ஆட்சி அமைந்தால் அயோத்தியில் ராமர்கோயில் கட்டுவோம்.

கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது சமையல் காஸ் சிலிண்டர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. தற்போதைய ஆட்சியில் ஏழைபெண்களுக்கு இலவசமாக சமையல் காஸ் இணைப்புகள் வழங்கப் படுகின்றன. இதுதான் நல்லாட்சி. இது பிரியங்காகாந்திக்கு புரியாது.

மேற்குவங்க மாநில முதல்வர் மம்தாபானர்ஜி இந்துக்களுக்கு அநீதி இழைத்து வருகிறார். அவருக்கு எதிராக பாஜக தொடர்ந்துபோராடும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply