சுமார் இரண்டரை ஆண்டு தாமதத்துக்குப் பிறகு ரியல் எஸ்டேட் மசோதா மாநிலங்களவையில் நேற்று நிறைவேற்றப் பட்டது.

கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது 2013 ஆகஸ்ட்டில் ரியல்எஸ்டேட் மசோதா மாநிலங்க ளவையில் தாக்கல் செய்யப்பட்டு நாடாளுமன்ற நிலைக் குழு பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது.

அதன் பிறகு கடந்த 2014 மே மாதம் பாஜக மத்தியில் ஆட்சிஅமைத்தது. பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான அரசு, ரியல்எஸ்டேட் மசோதாவில் சுமார் 118 திருத்தங்களை மேற்கொண்டது.

திருத்தப்பட்ட மசோதா கடந்த ஆண்டு மாநிலங்களவையில் அறிமுகம் செய்யபட்டது. ஆனால் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும்எதிர்ப்பு தெரிவித்தன. ‘ரியல் எஸ்டேட் மசோதா வாடிக்கையாளர்களுக்கு பாதகமாகவும் கட்டுமான நிறுவனங்களுக்கு சாதகமாகவும் உள்ளது’ என்று அந்தகட்சிகள் குற்றம் சாட்டின.

அதன்பேரில் மசோதாவில் 20 முக்கிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு மாநிலங்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. பிரதான எதிர்க் கட்சியான காங்கிரஸ், மசோதாவுக்கு ஆதரவு அளித்தது. இதனால் குரல்வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறை வேற்றப்பட்டது.

அவையில் மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு பேசியபோது, வாடிக்கையாளர்களின் நலன்களை காக்கும்வகையில் மசோதா வரையறுக்கப் பட்டுள்ளது, இதன் மூலம் வெளிப்படைத் தன்மை அதிகரிக்கும் என்றார்.

மக்களவையில் பாஜக.,வுக்கு பெரும்பான்மை பலம் உள்ளது. எனவே ரியல்எஸ்டேட் மசோதா விரைவில் மக்களவையில் நிறைவேற்றப்பட்டு சட்டமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply