ரிலீசான மூன்று நாட்களில் பிரதமர் நரேந்திரமோடியின் வாழ்க்கை வரலாற்றுப்படம் நாடு முழுவதும் ரூ.11 கோடி வசூல் செய்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் ஓமங்குமார். இந்தபடத்தில் மோடியாக நடித்துள்ளார் பிரபல இந்தி நடிகர் விவேக்ஓபராய்.
பிஎம் நரேந்திர மோடி திரைப்படம் கடந்த ஏப்ரல் 12ம் தேதி ரிலீசாகும் என அறிவிக்க பட்டது. ஆனால் தேர்தல்நேரம் என்பதால், படத்தை ரிலீஸ் செய்யக் கூடாது என தேர்தல் ஆணையம் தடைவிதித்தது. இதையடுத்து கடந்த வெள்ளிக் கிழமை, மே 24ம் தேதி படம் திரைக்கு வந்தது.
ரயில் நிலையத்தில் டீ விற்பனை செய்தமோடி, எப்படி கடுமையாக உழைத்து பிரதமர் ஆனார் என்பதை பற்றி காட்டுகிறதுபடம். அமித் ஷா வேடத்தில் மனோஜ் ஜோஷியும், மோடியின் அப்பாவாக ராஜேந்திர குப்தாவும் நடித்துள்ளனர். பிஎம் நரேந்திரமோடி திரைப்படம் வரவேற்பைபெற்றுள்ளது .
இந்நிலையில் இந்தபடம் மூன்று நாட்களில் நாடு முழுவதும் சேர்த்து ரூ.11.14 கோடி வசூல் செய்துள்ளது. முதல் நாளில், ரூ.2.88 கோடியும், இரண்டாவது நாளில் ரூ.3.76 கோடியும், மூன்றாவது நாளில் ரூ.4.50 கோடியும் வசூல் செய்துள்ளது. வரும் வாரங்களில் இந்த வசூல் கூடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.