உத்திரபிரதேச மாநிலத்தின் முக்கிய காங்கிரஸ் தலைவர் ரீட்டா பகுகுணா பாஜக.,வில் இணைந்தார். உத்தரப பிரதேச மாநிலத்தில்  அடுத்தஆண்டு நடைபெற உள்ள சட்டப் பேரவை தேர்தலில் பாஜக-விற்கு ஆதரவாக பிரச்சாரம்செய்ய உள்ளதாக ரீட்டா தெரிவித்துள்ளார்.

முதல்வர் வேட்பாளராக தன்னை அறிவிக் காததால் விரக்தியில் இருந்த ரீட்டா பகுகுணா பாஜவில் சேர உள்ளதாக முன்னதாக செய்திகள் வெளியாகின. உத்தரபிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றதேர்தல் நடைபெற உள்ளது. பாஜ, காங்கிரஸ், ஆளும் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ்  கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், முன்னாள் தலைவரும்,  பிராமண சமூகத்தை சேர்ந்தவருமான ரீட்டாபகுகுணா ஜோஷி, தன்னை முதல்வர் வேட்பாளராக  அறிவிக்காததால் காங்கிரசில் இருந்துவிலகி அவர் பாஜவில் இணையந்ததாக கூறப்படுகிறது.

உ.பி.யில் பிராமணர்கள் ஓட்டு வங்கி உள்ளதால், ரீட்டாவை இழுப்பதில் பாஜ ஆர்வமாக இருந்தது. இவரது சகோதரரும், முன்னாள் உத்தரகண்ட் முதல்வருமான விஜய்பகுகுணா அண்மையில் காங்கிரசில் இருந்து விலகி பாஜவில் இணைந்தார்  என்பது குறிப்பிடத் தக்கது. விஜய் பகுகுணா கூறுகையில், ‘‘மாயாவதி, முலாயம் கட்சிகளின் ஆட்சியில் மாநிலம் எந்தவளர்ச்சியும் அடையவில்லை,  மாநில வளர்ச்சிக்காக ரீட்டாவும் பாஜவில் இணையவேண்டும்’’என்று கூறியது குறிப்பிடத்தக்கது. இதன்படி, ரீட்டா பகுகுணா இன்று பாஜக-வில்  இணைந்தார்.

Leave a Reply