ரூபாய் நோட்டு விவகாரத்தில் பிரதமர் மோடி எடுத்தமுடிவு துணிச்சலானது எனவும் வரலாற்று சிறப்பு மிக்கது என முகேஷ் அம்பானி பாராட்டியுள்ளார்.
 

இதுகுறித்து  முகேஷ் அம்பானி கூறியதாவது:- “ ரூ.500,1000 தாள்கள் வாபஸ்பெறப்பட்டு புதிய 500, 2000 ஆயிரம் தாள்கள் வழங்கப்படும் என்ற மோடியின் அறிவிப்பு துணிச்சலான வரலாற்று சிறப்புமிக்க முடிவு. இதை செய்ததன் மூலம், நமது பிரதமர் டிஜிட்டல் முறையிலான உகந்த பணப் பரிவர்த்தனைக்கான சாத்தியமான வலுவான முயற்சியை எடுத்துள்ளார்.  

 
மின்னணு பரிவர்த்தனை, நியாயமான, வெளிப்படைத் தன்மையான வலுவான இந்தியா மற்றும் இந்திய பொருளாதாரத்துக்கு இந்தநடவடிக்கை உதவும். அனைத்து மட்டத்திலும் முன்னெப்போதும் இல்லாத பொறுப்பை இது கொண்டுவரும். இந்த மாற்றத்தால் மிகப் பெரும் பயன் அடைபவர்கள்  எளிய மக்களாகத்தான் இருப்பார்கள் என்று நான்நம்புகிறேன். ஒற்றை நடவடிக்கையின் மூலம், பயனற்ற அனைத்து பணத்தையும் ஆக்க பூர்வ நடவடிக்கைக்கு பிரதமர் கொண்டுவந்துள்ளார்.  பிரதமர் மோடியின் இந்தநடவடிக்கை  பணமில்லா பரிவர்த்தனைக்கு அனைவரையும் அழைத்துச் செல்லும். டிஜிட்டல் பரிவர்த்தனையிலான பொருளாதாரம் மூலம் இந்தியா மேலும் வலுவானதாக மாறஉதவும்” என்றார்.

Leave a Reply