பஞ்சாப் நேஷனல்வங்கியில் , ரூ.11,300 கோடி சட்டவிரோதமாகவும், உரிய அங்கீகாரம் பெறாமலும் பணப்பரிமாற்றம் நடந்தது கண்டுபிடிக்கப் பட்டது.

இதையடுத்து மத்திய நிதித்துறை அமைச்சகம்,  ,ஹாங் காங்கில் உள்ள 4 இந்திய வங்கிகளான ஸ்டேட்பேங்க் ஆஃப் இந்தியா, ஆக்ஸிஸ்வங்கி, அலஹாபாத் வங்கி, பேங்க்ஆப் இந்தியா ஆகிய வங்கிகளுக்கு வெள்ளிக் கிழமை கடிதம் எழுதியுள்ளது.  அதில், முறையற்ற கணக்குகள், ஆகியவைமீது நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியிருக்கிறது.

மேலும் முறையற்ற கணக்குகள் மூலம் வழங்கப்பட்டகடன் தொகையானது வங்கியில் செலவிடப்பட்ட தொகையுடன் ஒப்பிட்டு கணக்குகளை திரும்பப்பெறும் முயற்சிகள் ஈடுபடுமாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.

மேலும் சமூக ஆர்வலர்களை நியமித்து ரூ.250 கோடிக்குமேல் கடன் பெற்று இருக்கும் நபர்களை கண்காணித்து அவர்கள்பற்றி தகவல் பெறுமாறும் அறிவுறுத்தியுள்ளது.

இதனிடையே அடுத்தடுத்த வெளியான கடன்மோசடி விவகாரங்களால்,  மத்திய நிதித்துறையானது உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளது. சிபிஐ, வருமானத் துறையினரின் மூலம் விசாரணை மேற்கொண்டு வருவதுடன், சோதனைகளில் செய்துகைது நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவது குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply