பாகிஸ்தான் இந்த பரிதாபநிலைக்கு வருவதற்கான காரணத்தை பார்ப்பதற்கு முன், பாகிஸ்தானின் வருமானத்தை பற்றி பார்ப்போம்.

வருமானம்:

காங்கிரஸ் ஆட்சியில்

இதற்குமுன் காங்கிரஸ் ஆட்சியில் பல லட்சம்கோடி கள்ள நோட்டு அச்சடித்து இந்தியாவுக்குள் நுழையவிட்டு சம்பாதித்து வந்தது பாகிஸ்தான். அதாவது வருடத்திற்கு 3 லட்சம்கோடி அளவில் சம்பாதித்து விடும். அதாவது உழைக்காமல், ஏற்றுமதி செய்யாமல் இந்த தொகை வருமானமாக வந்து விடும். இது அவர்களின் மிகப்பெரிய வருமானமாக இருந்தது. தேசதுரோகிகள் இதற்கு உடந்தையாக செயல்பட்டனர்.

அமெரிக்கா

தீவிரவாதிகளை ஒடுக்குவதற்காக, பலலட்சம் கோடியை தானமாக வழங்கியது. ஆனால் பாகிஸ்தான் அதை தீவிரவாதத்தை வளர்ப்பதற்காக செலவிட்டது. அமரிக்காவும் அதைரசித்தது. ஏனென்றால் அமெரிக்கா பணம்கொடுப்பது இந்தியாவை அடக்குவதற்காகதான். ஆனால் வெளியில் கூறுவது தீவிரவாதிகளை ஒடுக்குவதற்காக நாங்கள் பணம் கொடுக்கிறோம் என்று.

சீனா

சீனா ஒரு வட்டிகடை. ஈரானில் இருந்து பலுசிஸ்தான் வழியாக பெட்ரோலிய பொருள்களை சீனாவுக்கு கொண்டுபோக வேண்டும் அதற்காக பாகிஸ்தானுக்கு பணம்கொடுத்து வந்தது அதுவும் குறைந்த வட்டிக்குத்தான்.

சவுதி அரேபியா

பொதுவாக அந்த நாடு தீவிரவாதிகளை ஊக்குவிக்கும் நாடு. உலகில் தீவிரவாதிகளின் தலைமை சவூதி என்றால் அதன் கிளை பாகிஸ்தான். இரு நாடுகளுக்கும் ஏற்றுமதியே தீவிரவாதிகள் தான். அதனால் தன் கிளைக்கு, அதாவது பாகிஸ்தானுக்கு கோடிக்கணக்கான பணத்தை வாரி இறைத்தது சவுதி

வளைகுடாநாடுகள்

பாகிஸ்தான் பெட்ரோல்வாங்கும் நாடுகள் பல வழிகளில் பாகிஸ்தானுக்கு உதவின. பாகிஸ்தானுக்கு வழங்கும் பெட்ரோல் விலையை ரகசியமாக வைத்தன, இலவசங்கள் அதிகமாக வழங்கின. கடன்தள்ளுபடி போல் அதிக சலுகைகள் வழங்கின.

உலக வங்கிகள்

அமெரிக்கா, சீனா, சவூதி நாடுகள் பாகிஸ்தானுடன் நடப்புறவு கொண்டாடுவதால் உலக வங்கி தாராளமாக கடன் வழங்கியது. பல நாடுகள் கட்டமைப்புக்காக நிதி வழங்கின, பெட்ரோலிய நாடுகளும் அதிக நிதிகளை இலவசமாக வழங்கியது. இதுபாகிஸ்தானுக்கு மேலும் கொண்டாட்டத்தை கொடுத்தது. இதனால் கோடிகளில் புரண்டது பாகிஸ்தான். இவ்வாறுவந்த அத்தனை பணமும் நம் பாரதத்தை அழிக்க மட்டுமே செலவழித்து பாகிஸ்தான்.

 

பொருளாதார வீழ்ச்சி:

மோடியின்ஆட்சி

இந்நிலையில், காலம்மாறியது காட்சிகளும் மாறியது. இந்தியாவில் மோடி ஆட்சிக்கு வந்தார். அமெரிக்காவில் டிரம்ப் ஆட்சிக்கு வந்தார். பாகிஸ்தானுக்கு கெட்டகாலம் ஆரம்பத்தது இங்கிருந்து தான்.

மோடி ஆட்சிக்கு வந்தவுடன் தீவிரவாதிகளுக்கு உதவி செய்யாதீர்கள் என்று பேசி பார்த்தார். நேசக்கரம் நீட்டினார். ஆனால் பாகிஸ்தான் அதை கொஞ்சம்கூட காதில் வாங்கவில்லை. இந்தியா மீது தீவிரவாத தாக்குதல் நடந்து கொண்டேதான் இருந்தது

பொறுமை இழந்த மோடி, உலக நாடுகள் அனைத்திற்கும் சுற்றுபயணம் மேற்கொண்டு நடப்புறவு ஆக்கினார், அதன்பின் பாகிஸ்தான் தான் தீவிரவாதிகளின் கூடாரம் என்று உலகிற்கு வெளிப்படுத்தினார்.

பயங்கரவாத அமைப்புகளுக்கு பாக்., அடைக்கலம் அளித்து வருவதற்கான ஆதாரங்களையும் சர்வதேச அரங்கில் இந்தியா சமர்பித்ததால், பாக்.,கால் அதைமறுக்க முடியவில்லை.

பாகிஸ்தான் தீவிரவாத நாடுதான் என்று உலகிற்கு தெரிய வைத்து விட்டது இந்தியா. அதனால் இனி யார் பாகிஸ்தானுக்கு உதவி செய்தாலும் அது தீவிரவாதிகளுக்கு உதவிசெய்தது போலாகும் என்ற எண்ணம் உலக நாடுகளுக்கு வந்துவிட்டது அதை உருவாக்கியவர் மோடி அவர்கள்

1) முக்கிய ஆயுதம் இந்தியாவின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை

இதனால் கள்ளநோட்டு அடித்து இந்தியாவிற்குள் கொண்டுவர பாகிஸ்தானால் முடியாமல் தடுமாறியது. அதனால்
பாகிஸ்தான் பொருளாதார சரிவு தொடங்கியது.. இது முதல்அடி

2) மோடி அமெரிக்க பாராளுமன்றத்தில் பேசியபிறகு,

அமெரிக்கா கொள்கையில் மாற்றம் உருவானது. பாகிஸ்தானுக்கு நாம் ஏன் நிதி கொடுக்க வேண்டும் தீவிரவாதிகள் வளர்வதற்கா? என்று பாராளுமன்றத்தில் அமெரிக்கா எம்பி க்கள் குரல் கொடுக்க ஆரம்பித்தனர். இதானால் பாகிஸ்தானுக்கு வழங்கபட்ட நிதியை அமெரிக்கா நிறுத்தியது, இது இரண்டாவது அடி

3) சீனா ஏற்கனவே தேவைப்பட்டால் தான் பணம் கொடுக்கும். தேவை முடிந்தால் பணம்கொடுப்பதை நிறுத்தி விடும். அது போல் அதுவும் நிதி கொடுப்பதை நிறுத்திவிட்டது.

4) ஏற்கனவே தீவிரவாதிகளின் கூடாரம் சவூதிஅரேபியாதான் என்று உலகம் கவனிக்க தொடங்கி உள்ள நிலையில், இனி நாம் பாகிஸ்தானுக்கு நீதி கொடுத்தால் அது உலகநாடுகளின் பார்வைக்கு தவறாகிவிடும் என்று, அதுவும் நீதியை நிறுத்து விட்டது. ஆனாலும் தெரியாமல் சில உதவிகள் செய்கிறது அவ்வளவுதான்.

5) அமெரிக்கா நீதியை நிறுத்தியவுடன் வளைகுடா நாடுகள், தன்கடன் பாக்கியையும் கேட்டு தொந்தரவு கொடுக்க ஆரம்பித்துவிட்டன. சிறு சிறு உதவிகளையும் நிறுத்தி விட்டன.

6) உலகவங்கி யிடம் அளவுக்கு மீறி கடன் வாங்கி வட்டி கூட செலுத்த முடியாமல் இருக்கிறது பாகிஸ்தான். அதுவும்போக உலக வங்கியில் அமெரிக்கா நினைத்தால்தான் கடன். இந்தியா நினைத்தால் தான் இனி அமெரிக்கா நினைக்கும். அதனால் அங்கேயும் கடன் கிடைக்காது

மொத்தத்தில் பாகிஸ்தான் 2018 ஆகஸ்ட் மாத இறுதியில் ₹ 1,04,000 கோடி அளவில் வாங்கிய கடனுக்கு வட்டிமட்டும் கட்டவேண்டும். இதுதான் இன்றைய பாகிஸ்தான் நிலை…

பாகிஸ்தான் நாட்டை வாங்குவோர் வாங்கலாம் என்ற நிலையில்தான் அது உள்ளது. ஆனாலும் சொந்தமக்களை பற்றி கொஞ்சம் கூட அக்கறை இல்லாமல், இன்னும் தீவிரவாதத்திற்கு பணத்தை வாரி இறைத்துக் கொண்டிருக்கிறது.

Comments are closed.