பிரதமர் மோடி கூறியது போல ரொக்கமில்லா பரிவர்த்தனையை சாத்திய மாக்குங்கள் என வங்கி அதிகாரிகளுக்கு, முதல்மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மத்திய அரசு கடந்த 8–ந்தேதி அன்று 500, 1,000 நோட்டுகள் செல்லாது என அறிவித்தது. அன்று முதல் வங்கிகளில் தங்கள் பழைய 500 மற்றும் 1,000 நோட்டுகளை கொடுத்துமாற்ற கூட்டம் அலைமோதி வருகிறது. இன்றளவும் பணத்தட்டுபாடு முழுமையாக சரிசெய்யப் படவில்லை. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி வங்கிகளில் டிஜிட்டல் தொழில் நுட்பங்களை புகுத்தி ரொக்கமில்லா பரிவர்த்தனையை நாடுமுழுவதும் கொண்டுவர விரும்புவதாக கூறியுள்ளார்.

மாநில அளவிலான வங்கி அதிகாரிகள் கூட்டத்திற்கு நேற்று ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. இதில் முதல்மந்திரி தேவேந்ரா பட்னாவிஸ் கலந்து கொண்டு வங்கி அதிகாரிகளுடன் பேச்சு வார்தை நடத்தினார். இதில் ஆர்.பி.ஐ., எஸ்.பி.ஐ., பி.ஒ.எம்., பி.ஒ.ஐ., நபார்டு, போன்ற வங்கிகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 

இந்த கூட்டத்தில் பிரதமர் மோடியின்பேச்சை மேற்கொள் காட்டி அவர் கூறியது போலவே ரொக்கமில்லா பரிவர்த்தனையை சாத்திய மாக்குவதற்கு வங்கி அதிகாரிகள் அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என முதல்மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கேட்டுக்கொண்டார்.

மேலும் மக்களின் தேவையை கருத்தில்கொண்டு அதிகநேரம் பணி செய்து சேவையாற்றிய அனைத்துவங்கி அதிகாரிகளுக்கும் அவர் வாழ்த்து தெரித்தார்.

Leave a Reply