ரொக்கப்பணப் பரிமாற்றத்திற்கான உச்சவரம்பை 3 லட்சம் ரூபாயிலிருந்து 2 லட்சம் ரூபாயாக குறைத்து மத்திய அரசு நேற்று அதிரடியாக உத்தர விட்டுள்ளது. திருத்தம் செய்யப்பட்ட நிதிமசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாட்டில் கள்ள பொருளா தாரத்தையும் கறுப்பு பொருளாதாரத்தையும் ஒழிக்கும்வகையில் கடந்த ஆண்டு நவம்பர் 8ம்தேதி பிரதமர் நரேந்திர மோடி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அதிரடி அறிவிப்பு வெளியிட்டார்.
 
இதனைத் தொடர்ந்து புதியதாக 500 மற்றும் 2000 நோட்டுக்கள் புழக்கத்திற்குவிடப்பட்டன. இருந்தாலும் மிகக் குறைந்த அளவிலேயே புழக்கத்திற்கு விடப்பட்டதால் நாட்டின் அனைத்துபகுதிகளிலும் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்நிலையில், பணத் தட்டுப்பாட்டை போக்கும் விதமாக மின்னனு பணப் பரிவர்த்தனையை ஊக்குவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. மின்னனு பண பரிவர்த்தனையை மேற்கொள்ளும் நபர்களுக்கு ஊக்கப்பரிசுகளையும் அளித்துவருகிறது.
 

ரொக்க பண பரிவர்த்தனையை குறைக்கும்விதமாக, கடந்த பிப்ரவரி 1ம்தேதி நிதி அமைச்சர் அருண்ஜெட்லி அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டார். அதாவது "ஏப்ரல் 1ம் தேதி முதல் 3 லட்சம் ரூபாய்வரை மட்டுமே ரொக்கப் பணப் பரிவர்த்தனையை மேற்கொள்ள முடியும், அதற்கு மேல் மேற்கொள்ளும் ரொக்க பரிவர்த்தனைகளுக்கு அபராதம் விதிக்கப்படும்" என அறிவித்தார்.

இந்நிலையில், 2017ம் ஆண்டிற்கான திருத்தி அமைக்கப் பட்ட நிதி மசோதாவை நிதிஅமைச்சர் அருண்ஜெட்லி லோக்சபாவில் தாக்கல்செய்துள்ளார். அதில் வரும் ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து ரொக்க பணப் பரிமாற்றத்திற்கான உச்சவரம்பை 2 லட்சம் ரூபாயாக குறைத்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply