கல்வி நிலையங்களில் ஆர்எஸ்எஸ் சிந்தனைகளை திணிக்க தான் முற்படுவதாக நிரூபித்தால் அரசியலை விட்டே விலக தயார் என எதிர்க் கட்சியினருக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி சவால் விடுத்துள்ளார்.

எதிர்க் கட்சி உறுப்பினர்களின் அனல் கேள்விகளுக்கு  பதிலளித்து மிகவும் உணர்ச்சிமயமாக பேசிய ஸ்மிருதி இரானி பல்வேறு இடங்களில் ஆவேசமாக தனது கருத்துக்களை எடுத்து ரைத்தார். நாடாளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தியை எதிர்த்து போட்டியிட்ட தனாலோயே காங்கிரஸ் கட்சியினர் என்னை குறிவைத்து சர்ச்சைகளை கிளப்புகின்றனர்.


மத்திய அமைச்சர் என்கிற முறையில் எனது கடைமையை செய்ததற்காக எதிர் கட்சிகளிடம் மன்னிப்புக் கேட்கத் தேவையில்லை   காங்கிரஸ் ஆட்சியில் நியமிக்கப்பட்ட பல்கலைகழக துணை வேந்தர்களில் ஒருவராவது  தான் கல்வி நிலையங்களில் ஆர்.எஸ்.எஸ் சிந்தனைகளில் திணிப்பதாகக் குற்றம் சாட்டினால் அரசியலைவிட்டே விலகத்தயார்.


ரோகித் வெமுலா தனது தற்கொலைக்கு யாரும்பொறுப்பல்ல என்று கடிதம் எழுதியுள்ளார். அவரது சடலம் அரசியல் செய்வதற்கான கருவியாக ராகுல் காந்தியால் பயன்படுத்தப்பட்டது.  என்று கண்கலங்க ஸ்மிருதி இரானி பதில் அளித்தார்

Leave a Reply