ஐதராபாத் மத்திய பல்கலைக் கழகத்தில் பயின்று வந்த தலித்மாணவர் ரோகித் வெமுலா உள்பட 5 மாணவர்களை பல்கலைக் கழக நிர்வாகம் இடை நீக்கம் செய்தது. இதனால் அவர் கடந்த 17–ந் தேதி விடுதி அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். மாணவர் ரோகித் சாவுக்கு நீதிகேட்டு பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் தொடர்ந்து கண்டன போராட்டம் நடத்திவருகின்றனர்.


 பாஜக அரசுக்கு கடும்நெருக்கடி ஏற்பட்டு வரும் இந்த சம்பவம் தொடர்பாக மகாராஷ்டிராவில் செய்தியாளர்களுக்கு பேட்டிஅளித்த வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறியதாவது:- “ எனக்கு கிடைத்துள்ள தகவலின்படி ரோகித் வெமுலா தலித் அல்ல. சில பேரால், அவர் தலித்மாணவராக காட்டப்படுகிறார். இந்த விவகாரம் மிகவும் பெரிது படுத்தப் படுகிறது. அவர் தலித் என்பது அடிப்படை ஆதாரமற்ற கூற்று” இவ்வாறு அவர் தெரிவித்தார். ரோகித் வெமுலா பிற்படுத்தப்பட்ட பிரிவான வத்தேரா இனத்தை சேர்ந்தவர் என்று தகவல்கள் கூறுகின்றன.

Leave a Reply