‘ஹியூமன்ஸ் ஆப் பாம்பே’ என்ற சமூக ஆர்வலர்கள்குழு முக்கிய பிரமுகர்களின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவங்களை தங்களது பேஸ்புக்பக்கத்தில் வெளியிட்டு வருகிறது. அந்தவகையில் பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்க்கையில் நடந்த முக்கிய சம்பவங்களை அந்தகுழுவிடம் கூறியுள்ளார். அவை 5 பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே மூன்று பாகங்கள் வெளியாகி உள்ளன.

முதல் பாகத்தில் தந்தையின் டீக் கடையில் உதவியாக இருந்ததை பற்றி மோடி கூறியிருந்தார். இரண்டாவது பாகத்தில் இமயமலைக்கு சென்று விட்டு 2 ஆண்டுகள் கழித்து வீடுதிரும்பியதை குறிப்பிட்டிருந்தார். மூன்றாவது பாகத்தில் ஐந்து நாட்கள் காட்டில் தனியாகவசித்த அனுபவத்தை நினைவுகூர்ந்திருந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் பிரதமர் மோடியின் 4-வது பாகம் வெளியானது. இதில் அவர் கூறியிருப்பதாவது:குஜராத்தின் முதல்வராக பதவியேற்பதற்கு முன்பாக எனது தாயாரைசந்தித்தேன். முதல்வர் பதவி என்றால் என்ன என்பதுகூட எனது தாயாருக்கு தெரியாது. என்னை அவர் ஆரத்தழுவி முத்தமிட்டார். லஞ்சம் வாங்க மாட்டேன் என்று எனக்கு ஏற்கெனவே வாக்குறுதி அளித்திருக்கிறாய். அந்த பாவத்தை மட்டும் ஒருபோதும் செய்யாதே என்று எனதுதாயார் எனக்கு அன்பு கட்டளையிட்டார். அது என் மனதில் ஆழமாகப்பதிந்தது. நான் ஒரு சாதாரண பணியில் இருந்தால்கூட எனது தாயார் மகிழ்ச்சி அடைவார். அவருக்கு பதவிகள் பெரிதில்லை.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply