இந்தியா-பாகிஸ்தான் இடையே நடைபெற்றபோரில் ஹீரோவாக விளங்கிய லெப்டினன்ட் ஜெனரல் ஜே.எப்.ஆர்.ஜேக்கப் (ஓய்வு) உடல்நலக் குறைவு காரணமாக  காலமானார்.


பிரிட்டீஷார் ஆட்சியில் இருந்தபோது பெங்கால் பிரசிடென்சியில் கடந்த 1923-ம் ஆண்டு பிறந்த ஜேக்கப், தனது 19-ம் வயதில் ராணு வத்தில் சேர்ந்தார். இவர் 2-ம் உலகப்போர் மற்றும் 1965-ல் இந்தியா-பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் ஆகியவற்றில் பங்கேற் றுள்ளார்.

பின்னர் படிப்படியாக உயர்ந்து மேஜர் ஜெனர லானார். இந்திய ராணுவத்தின் கிழக்குபிராந்திய தளபதியாக பதவிவகித்தார். அப்போது (1971-ல்) பாகிஸ்தானுடன் நடைபெற்ற போரில் இந்தியா வெற்றிபெறுவதற்கும் பாகிஸ்தானிடமிருந்து வங்கதேசத்துக்கு சுதந்திரம் கிடைக்கவும் ஜேக்கப் முக்கிய பங்கு வகித்துள்ளார். 1978-ல் ஓய்வுபெற்ற ஜேக்கப், கோவா மற்றும் பஞ்சாப் மாநிலங்களின் ஆளுநராகவும் பதவிவகித்துள்ளார்.

இவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, “லெப்டினன்ட் ஜெனரல் ஜேக் கபை பல முறை சந்தித்துப்பேசி உள்ளேன். அப்போது அவர் தனது சுய சரிதையை எனக்கு பரிசளித்தார். ஜேக்கபின் ஆன்மா சாந்திஅடையட்டும். மிகவும் சிக்கலான தருணத்தில் நாட்டுக்காக அவர் ஆற்றிய தன்னல மற்ற சேவைக்காக என்றென்றும் அவருக்கு நன்றி உள்ள வர்களாக நாம் இருப்போம்” என பதிவிட்டுள்ளார்.

Leave a Reply