வங்கதேசத்துக்கு ரூ.13,441 கோடி கடன் வழங்குவது தொடர்பான ஒப்பந்தத்தில் இந்தியா புதன் கிழமை கையெழுத்திட்டது. வெளிநாடு ஒன்றுக்கு இந்தியாவழங்கிய கடனில் இதுவே மிகப்பெரிய தொகையாகும்.
 பிரதமர் நரேந்திரமோடி கடந்த ஜூன் மாதம் வங்கதேசம் சென்றிருந்தபோது கடனுதவி வழங்க ப்படும் என அறிவித்திருந்தார். இதன் அடிப்படையில், ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்தியாவிடம் கடனாக பெறப்படும் ரூ.13,441 கோடி நிதியை சமூக நலத்திட்டங்களுக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக வங்கதேச அதிகாரிகள் தெரிவித்தனர்.


 இந்நிலையில், வங்கதேசம் – இந்தியா இடையேயான நட்புறவு மாபெரும் உச்சத்துக்கு சென்றுள்ளது. அந்தநட்பின் பலனாகத்தான் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது என்று வங்கதேச பிரதமரின் முதன்மைச் செயலர் அபுல்கலாம் ஆசாத் தெரிவித்தார்.

Leave a Reply