சமையல் எரிவாயு உருளைக்கு மத்தியஅரசு வங்கிக்கணக்கில் மானியம் வழங்குவதுபோல், உரம் வாங்கும் விவசாயிகளுக்கும் வங்கிக்கணக்கில் நேரடியாக மானியம்வழங்க மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது.


 விவசாயப் பணிகளுக்காக விவசாயிகள் வாங்கும் உரத்துக்கான மானியத்தொகையை மத்திய அரசு உரமானியமாக செலுத்திவருகிறது. சில உரங்களுக்கு 90 சதவீதம்வரை அரசு மானியம் வழங்குகிறது.

 இந்த மானியத்தொகையை சம்பந்தப்பட்ட உரம் நிறுவனங்களுக்கு நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நடைமுறையை மாற்றி, விவசாயிகளின் வங்கிக்கணக்கில் மானியத்தொகை செலுத்த மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது.


 தமிழகத்தில் விவசாயப்பணிகளுக்கு ஆண்டுக்கு சுமார் 5.5 லட்சம் டன் யூரியா உரம் தேவைப் படுகிறது. இந்த உரம் மத்திய அரசின் மூலமும், தமிழ்நாட்டில் உள்ள உரத் தொழில்சாலைகளில் இருந்து மாநில அரசு மூலமும் கொள்முதல் செய்யப்பட்டு உரம்விற்பனை நிலையங்கள் மூலமாக விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றன.

 50 கிலோ எடைகொண்ட ஒருமூட்டை யூரியா மானியத்தின் அடிப்படையில் ரூ.270 முதல் ரூ.274 வரை விற்பனை செய்யப் படுகிறது. இந்த 50 கிலோ யூரியாவின் விலை சுமார் ரூ.1,200.

 யூரியா உரம் தழைச்சத்துக்காக அதிகளவில் பயன்படுத்தப் படுகிறது. நெல், தானியம் உள்பட அனைத்து விதமான பயிர்களுக்கும் யூரியா பயன்படுத்தப்படுகிறது. இதனை வாங்கி பயன் படுத்தும் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் மானியத்தொகையை நேரடியாக செலுத்த அரசு பரிசீலனை செய்து வருவதால், விவசாயிகள் உரத்தைவாங்கும் போது அதற்கான முழுத் தொகையை செலுத்தி வாங்க வேண்டிய நிலைமை ஏற்படும்.

 இதனால் கள்ளச்சந்தை கட்டுப்படுத்தப்படும்

Leave a Reply

Your email address will not be published.