வன்முறையில் ஈடுபட்ட பாஜக  நிர்வாகியை கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கி கட்சிதலைவர் தமிழிசை சவுந்ததர ராஜன் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து பாஜ தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த ஜூலை 7ம்தேதி நடைபெற்ற விழுப்புரம் மாவட்ட செயற்குழுகூட்டத்தில் ஆயுதம் தாங்கிய வெளிநபர்களை அழைத்துவந்து வன்முறையில் ஈடுபட்டு, கட்சியின்பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய பி.கே.சேகர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து இடை நீக்கம் செய்யப்படுகிறார். கட்சி நிர்வாகிகள் எவரும் அவருடன் கட்சிரீதியாக எந்த விதமான தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

One response to “வன்முறையில் ஈடுபட்ட பாஜக நிர்வாகள் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கம்”

  1. **M1ch@3L says:

    KODUMAIYAI SEIDHAVAN PUTHISAALI. ADHAI GOBITTHU THADUTTHAVAN KUTRAVAALI ENBADHAI IDHU NINAIVUP PADUTTHUGIRADHU.

Leave a Reply