டெல்லியில் உள்ள ஜவஹர்லால்நேரு பல்கலைக் கழக வளாக விவகாரம் பூதாகரமாகி உள்ள நிலையில், ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்ட ராம் கார்க் தொகுதியின் பாரதிய ஜனதா எம்.எல்.ஏ. கயான்தேவ் அகுஜாவின் கருத்து பெரும்சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தினமும் 3,000 பயன் படுத்திய ஆணுறைகள், 500 பயன் படுத்திய கரு கலைப்பு ஊசிகள், 10,000 சிகரெட் துண்டுகள் மற்றும் பிறபொருட்கள் கண்டுபிடிக்கப் படுகிறது என்று அகுஜா சில தினங்களுக்குமுன்பு பேசியிருந்தார்

முன்னதாக ராஜஸ்தான் மாநில பாஜக எம்.எல்.ஏ. கைலாஷ் சவுத்ரி காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியை துரோகி என்றும் அவரை தூக்கிலிடவேண்டும் என்று கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்தகருத்து பாஜக., தலைமைக்கு மேலும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பாரதிய ஜனதா எம்எல்ஏ. கயான் தேவ் அகுஜாவிற்கு, பாஜக தலைவர் அமித் ஷா நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் டெல்லிக்கு நேரில்வந்து தன்னுடைய கருத்துகுறித்து விளக்கம் அளிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply