பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை சமாளிப்பது குறித்து ஆலோசிக்க பிரதமர் நரேந்திரமோடி வரும் 27-ம்தேதி நிதி ஆயோக் கூட்டத்தை கூட்டியுள்ளார். கடந்த மாதம் 8-ம்தேதி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தது முதல் சாமானியமக்கள் கடும் பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளனர். பணத்தட்டுப் பாட்டால் சிறு, குறு, தொழில்கள் முடங்கியுள்ளன. மத்திய அரசின் நடவடிக்கை கடும் விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளது.

நாட்டின் பொருளாதார வீழ்ச்சி 7.5 சதவீதத்தில் இருந்து சரிவடைந்து வருவதாக தகவல்கள் வெளியாகி யுள்ளது. இந்நிலையில் திட்ட  கமிஷனுக்கு மாற்றாக ஏற்படுத்தப்பட்ட நிதி ஆயோக்கூட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி கூட்டியுள்ளார். இதில் நிதி ஆயோக் அமைப்பின் துணை தலைவர், உறுப்பினர்கள் மட்டுமின்றி பொருளாதார வல்லூநர்கள், தொழிற் துறை பிரதிநிதிகளும் பங்கேற்று கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக ரொக்கமில்லா பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும்வகையில் பரிசு, சலுகை திட்டங்களை வகுப்பது குறித்தும் கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  இதன் அடிப்படையில் புதியதிட்டங்களை உருவாக்க பிரதமர் நரேந்திர மோடி முடிவு எடுத்துள்ளதாகவும், செய்திகள் வெளியாகியுள்ளன.

Leave a Reply