வறுமை, ஊழல், வேலை யில்லாத் திண்டாட்டம் போன்ற பிரச்னைகள் இல்லா இந்தியாவை உருவாக்குவதே பிரதமர் நரேந்திர மோடியின் விருப்பம் என மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான வெங்கய்யநாயுடு தெரிவித்தார்.

ஆர்எஸ்எஸ், பாஜக இல்லா இந்தியாவை உருவோக்குவோம் என்றுபேசிய பிகார் முதல்வர் நிதீஷ் குமாருக்கு பதிலடிகொடுக்கும் வகையில் வெங்கய்ய நாயுடு இவ்வாறு கூறினார்.

இது குறித்து டுவிட்டரில் அவர் திங்கள் கிழமை வெளியிட்ட பதிவுகளில் கூறப்பட்டிருப்பதாவது:

ஆர்எஸ்எஸ் இல்லாத இந்தியாவேண்டும் என எதிர்க் கட்சிகள் விரும்புகின்றன. ஆனால், வறுமை, ஊழல், வேலை யில்லாத் திண்டாட்டம் போன்ற பிரச்னைகள் இல்லாத இந்தியாவைத் தான் பிரதமர் மோடி விரும்புகிறார்.

ஆர்எஸ்எஸ் அமைப்பை எதிர்ப் பவர்கள் ஐஎஸ்ஐ., ஐ.எஸ். போன்ற பயங்கரவாத அமைப்புகள் குறித்து கவலைப்பட்டது கிடையாது.

ஜாதி மற்றும் மதவாத அரசியல்செய்பவர்கள், ஊழல்வாதிகள் ஆகிய அனைவரும் கூட்டுச்சேர்ந்து பாஜகவுக்கு எதிராக அணி அமைப்பதன் மூலம் நாட்டின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர். இவர்களிடம் நாட்டுமக்கள் உஷாராக இருக்கவேண்டும் என்று அந்தப் பதிவுகளில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply