ஆப்ரிக்கா நாடான ருவாண்டாவில் மோடி பால்ககாமே உருவாக்கிய கிரிங்கா என்கிற வீட்டுக்கு ஒரு பசு என்கிற திட்டத்திற்கு 200 இந்திய பசுக்களை ருவாண்டாவின் புகசெரா மாவட்டத்தில் உள்ள ர்வெரு கிராமத்தில் வாழும் ருவாண்டா மக்களுக்கு இந்தியர்களின் சார்பாக பரிசளித்தார்.


என்னடா..வறுமையில்வாழும் ஒரு ஆப்பிரிக்கா நாட்டுக்கு இந்தியா பசுக்களை தானமாக வழங்குகிறதே! இது ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தின் அடிப்படை அல்லவா என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் ஒருகாலத்தில் ருவாண்டா மக்களை இந்த பசுக்கள்தான் சமுதாயத்தில் உயந்தவர்கள் மற்றும் தாழ்ந்தவர்கள் நிலையை நிர்ணயித்து வந்தது.

காலம் காலமாகவே ருவாண்டாவின் இனங்களான துட்சிக்களும் ஹூட்டுக்களும் தவாக்களும் சகோதரர்களாகவே ஒற்றுமையாகவே வாழ்ந்துவந்தார்கள். சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருந்தவர்களை துட்சிகள் என்றே அழைத்து வந்தார்கள். அவர்களுக்கு அடுத்த நிலையில் இருந்த மக்களை ஹூட்டுக்கள் என்று அழைத்து வந்தார்கள். பண்ணை அடிமைகளாக இருந்தவர்களை தவாக்கள் என்று அழைத்தார்கள்.

ஒரு வீட்டில் பத்து பசுக்கள் இருந்தால் அவர்களை துட்சுக்கள் என்றார்கள்., அதாவது அவர்கள் சமூகத்தில் உயர்ந்தவர்கள. 10பசுக்களுக்கு குறைவாக
வைத்து இருந்தவர்களை ஹூட்டுக்கள் என்று கூறினார்கள். ஆக ருவாண்டா மக்களின் சமூக அடையாளத்தையே பசுக்கள் தான் தீர்மானித்துள்ளதே தவிர இனமும் மதமும் செல்வமும் அல்ல.

துட்சிக்கள் பசுக்களை புனிதமாக கருதி வளர்த்து வந்தார்கள். ஹூட்டுக்கள் வியாபாரத்துக்காக பசுக்களை வளர்த்து வந்தார்கள். தவாக்கள் உணவுக் காகத்தான் பசுவை கொல்வார்கள் என்பதில் இருந்து ருவாண்டாவின் சமூக கட்டமைப்பு கிடட தட்ட இந்தியா மாதிரியே இருப்பதை அறிந்துகொள்ளலாம்.

எப்பொழுது ருவாண்டாவில் ஜெர்மானியர்களும் அவர்களுக்கு பிறகு பெல்ஜியர்களும் நுழைந்து ருவாண்டோ மக்களை மதமாற்ற ஆரம்பித்த்தார்களோ அதற்கு பிறகுதான் ருவான்டா மக்களின் வாழ்வில் பசுக்களை வைத்து சமூக அடையாளம் இருந்த நிலைமாறி இனத்தை வைத்து சமூக அடையாளம் நிர்ணயமானது.

துட்சி ஹூட்டு மற்றும் தவா ஆகிய மூன்று இனங்களுமே பழங்குடியினர் தான் என்றாலும் இதில் தவா இன மக்கள் தான் ருவாண்டாவின் பூர்வகுடி மக்கள் என்றும் மற்ற இரு இனங்களும் ருவாண்டாவில் ஒருவர் பின் ஒருவராக வந்து குடியேறினார்கள் என்று சொல்லப்பட்டாலும் அது எந்த அளவிற்கு உண்மையோ அது படைத்தவனுக்கே வெளிச்சம்…

துட்சிகள் மற்ற இரு இனத்தை காட்டிலும் கொஞ்சம் உயரமாகவும் நிறமாகவும் அழகாகவும் இருந்ததால் அவர்களை ருவாண்டாவின் பூர்வகுடிமக்கள் கிடையாது வடக்கே இருந்து ஆடு மாடு மேய்த்துக்கொண்டு இங்கே வந்து ஹூட்டுக்களை அடிமைபடுத்தினார்கள் என்று ருவாண்டாவில் மதம்மாற்ற வந்த ஜெர்மானிய மற்றும் பெல்ஜிய மிசனரிகளின் பிராச்சரத்தினால் ஒற்றுமையாக இருந்த ருவாண்டா மக்கள் இன ரீதியாக பிளவு பட ஆரம்பித்தார்கள்.

இந்த ஹூட்டுக்கள் துட்சிக்களை விட கறுப்பாகவும் கொஞ்சம் குட்டையாகவும் குண்டாகவும் இருப்பார்கள். தவாக்கள் ஹூட்டுக்களை விட குட்டையாகவும் கறுப்பாகவும் குண்டாகவும் இருப்பார்கள். இந்த
அடையாளத்தை வைத்தே இனம் பிரித்த பெல்ஜியர்கள் துட்சிக்களை உயர்ந்த சாதி என்றும் ஹூட்டுக்களை பிற்படுத்தப்பட்டவர்கள் என்றும் தவாக்களை தாழ்த்தப்பட்டவர்கள் என்றும் இன அடையாளமாக மாற்றினார்கள்.

இதற்கு பிறகு தான் ருவாண்டா மக்கள் தொகையில் 85 சதவீதமாக இருக்கும் ஹூட்டுக்கள் தங்களை விட எண்ணிக்கையில் குறைவாக இருந்துகொண்டு துட்சிக்கள் நம்மை அடக்கி ஆண்டுlள்ளார்களே என்று கோபம் கொண்டு துட்சிக்களை கொலை செய்ய ஆரம்பித்தார்கள். கூடவே பசுக்களையும் கொல்ல ஆரம்பித்தார்கள். ஏனென்றால் பசுக்கள் துட்சிக்களின் அடையாளம் என்றே மதம்மாற்றப்பட்ட ஹூட்டுகளுக்கு உணர்த்தபட்டதால் அவர்கள் பசுக்களையும் விட்டு வைக்கவில்லை.

1962 ல் ருவாண்டா ஆட்சி அமைப்பில் இருந்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துட்சிக்களை கொன்றுவிட்டு ஆட்சிக்கு வந்த ஹூட்டுக்கள் பசுக்களை துட்சிக்களின் மீது இருந்த வெறுப்பினால் கொன்று கொண்டே இருந்ததால் ஒரு காலத்தில் ருவாண்டா மக்களின் சமூக அந்தஸ்தினை நிலை நாட்டியபசுக்கள் அழிந்துபோனது.

பசுக்கள் இல்லாமல் போனதால் மக்களின் வருமானம் குறைந்து ருவாண்டாவில் வறுமைநுழைந்து பஞ்சம் பசி கொலை கொள்ளை என்று நாடே நாசமாக போனது. ருவாண்டாவில் உச்சககட்டமாக 1994 ஏப்ரலில் ஹூட்டு இன அரசாங்கம் நடத்திய துட்சி இன அழிப்பில் சுமார் 75 சதவீத மக்களை இழந்தாலும் எஞ்சிய மக்களை வைத்து மூன்றே மாதத்தில். ருவாண்டாவின் ஆட்சியை பிடித்த துட்சி இனத்தினர் தங்களின் அடையாளமான பசுக்களை மீண்டும்வளர்க்க ஆரம்பித்தார்கள்.

அப்படி உருவானது தான் கிரிங்கா என்கிற வீட்டுக்கு ஒரு பசு என்கிற திட்டம். இந்த திட்டம் 2006-ல் இப்போதைய ருவாண்டா அதிபர் பால் ககாமேவால் தான் கொண்டு வரபட்டது. இவர் தான் ரிவாண்டன்
பேட்ரியாட்டிக் பிரண்ட் என்கிற துட்சி இன போராளிக்குழுவின் தலைவராக இருந்தவர் இவர் தலைமையில் தான் துட்சி இன மக்கள் 7 லட்சம் மக்களை இழந்து இருந்தாலும் மனம் தளராது போராடி தீவிரவாத ஹூட்டுக்களை நாட்டை விட்டே விரட்டி 32 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஆட்சியை பிடித்தார்கள்.

பால் ககாமே ஆட்சியில் பசுக்கள் வளர்ப்பு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. 2006 ல் வீட்டுக்கு ஒரு பசு என்று கிரிங்கா திட்டம் ஆரம்பமான பிறகு சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் பசுக்கள் வறுமையில் வாடும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் அளிக்கப்பட்டுள்ளது. அந்த பசுக்கள் கன்றுகள் ஈன்று மீண்டும் ருவாண்டாவில் பசுக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் ருவாண்டா மக்களின் வாழ்வில் வறுமை விலகி வருகிறது.

ஐரோப்பியர்கள் ருவாண்டாவுக்கு மதம் பரப்ப சென்று அங்குள்ள பசுக்களை அழித்து அங்கு வறுமையை விதைத்து சென்றதற்கு பதிலாக இந்திய பிரதமர் ருவாண்டாவுக்கு 200 பசுக்களை அளித்து அந்தநாட்டிற்கு சுபீட்சத்தை அளித்து வந்துள்ளார். ஏனென்றால் பசு தான் ருவாண்டா மக்களின் செல்வம். பசு தான் ருவாண்டாவின் புண்ணியம். அதோடு பசுதான் நம் நாட்டின் இறைவன். பசுவின் ஓவ்வொரு அங்கத்திலும் நம்முடைய கடவுள்கள் உறைந்துள்ளார்கள் அதனால் நம்முடைய இறைவனை மோடி ருவாண்டாவுக்கு அளித்து ஐரோப்பியர்களால் பாவப்பட்ட அந்த தேசத்தை புனிதமாக்கிவிட்டார் என்று ஒரு இந்தியனாக என் தேசத்தலைவனை நினைத்து பெருமை கொள்கிறேன்.

 

(மின் வலையிலிருந்து எடுத்து இங்கு பதிவு செய்யப்படுகிறது.)

Leave a Reply