கேரளாவில் செயல்படும் சீரோ மலபார் சபையின்கீழ் பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் நகரில் ஒருசபை செயல்பட்டு வருகிறது. இதன் பி‌ஷப்பாக இருப்பவர் பிராங்கோ முல்லக்கல்.

பி‌ஷப் பிராங்கோ முல்லக்கல் மீது கோட்டயம் குரு விலங்காடு கன்னியாஸ்திரிகள் மடத்தைச்சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் பாலியல் புகார் கூறி உள்ளார். கோட்டயத்திற்கு அந்தபி‌ஷப் வந்தபோது தன்னை மிரட்டி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் குற்றம் சாட்டி உள்ளார்.

இது தொடர்பாக அவர், போலீசிலும் புகார்செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கேரள தனிப்படை போலீசார் ஜலந்தர் சென்று பி‌ஷப்பிடம் இந்தபுகார் பற்றி விசாரணை நடத்தி உள்ளனர்.இதனால் பாலியல் புகார் கூறப்பட்ட பி‌ஷப் கைது செய்யப்படலாம் என்ற சூழ்நிலை உருவானது. ஆனால் இதுவரை அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுபெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதனால் அதிருப்தி அடைந்த கன்னியாஸ்திரிகள் பிஷப்புக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த போராட்டத்தில் உள்ள  கன்னியாஸ்திரிக்கு நடிகை மஞ்சு வாரியர் ஆதரவு தெரிவித்துள்ளார். அதில், “கன்னியாஸ் திரிக்கு ஆதரவாக அவரது கைகோத்து போராட்டத்தில் கலந்துகொள்கிறேன். குற்றம்செய்த பிஷப் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கன்னியாஸ்திரிக்கு ஆதரவாக அரசு கண்திறக்க வேண்டும்” என்றார்.இதனால் இந்தபோராட்டம் மேலும் வலுப்பெற்று வருகிறது.

Tags:

Leave a Reply