” வணக்கம், தமிழ் மக்களுக்கு எனது அன்பான வணக்கம்; மருதமலை முருகனுக்கு அரோகரா ” – என தமிழில் கூறினார் , தொடர்ந்து அவர் பேசியதாவது: தமிழக மக்கள் அனைவருக்கும் இந்த காவல்காரனின் வணக்கம்.

தமிழர்களின் பண்பாடு பிரசித்திபெற்றது. தமிழ் புத்தாண்டை கொண்டாடும் மக்களுக்கு வாழ்த்துக்கள். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கும் எனதுவணக்கம். அவர்களது எண்ணம் நம்மை வழிநடத்தும். 21ம் நூற்றாண்டு எந்த நாடு எந்தபாதையில் செல்ல போகிறது என்பதை காட்ட போகிறது. தற்போது நடப்பது இரு கூட்டணிகள் இடையிலான ஒருபோட்டி. மக்களுக்கு பாடுபடும் தேசிய ஜனநாயக கூட்டணி ஒன்று. மற்றொன்று நிலையற்ற ஆட்சி ஏற்படுத்த திட்டமிடும் கூட்டணி. அவர்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற துடிக்கின்றனர். வளர்ச்சியை முன்வைத்தே நாம் ஆட்சியை நடத்துகிறோம். இந்தியாவின் பாதுகாப்பில் நாம் உறுதியாக இருக்கிறோம். பாதுகாப்பில் சமரசம்கிடையாது. பாதுகாப்பு துறையில் தமிழகத்தின் பங்கு முக்கியமானதாக அமையவுள்ளது. எதிர் கட்சிகளுக்கு நாட்டின் பாதுகாப்பில் அக்கறை இல்லை. மென்மையான தன்மையுடன் செயல் பட்டது . அவர்கள் அதிகாரத்தில் இருக்கும் போது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கோவையில் 1998-ல் நடந்த குண்டு வெடிப்பை நாம் மறக்க முடியாது. அந்நேரத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர் கட்சிகள் எவ்வாறு செயல்பட்டன என்பது நமக்கு தெரியும். பயங்கர வாதிகளுக்கு அசலும், வட்டியுமாக திருப்பி கொடுப்போம். சர்ஜிக்கல் ஸ்டிரைக், விமான தாக்குதல், தேசியம் குறித்து எதிர் கட்சிகள் கேள்வி எழுப்புகின்றன. அனைவருக்கும் வங்கிக் கணக்கு , சுகாதார பாதுகாப்பு திட்டம் துவங்க காரணமாக இருந்தது தேசியத் தன்மை தான் . 18 ஆயிரம் கிராமங்களுக்கு மின்சாரம் வழங்கியுள்ளோம். ஏழை மக்களுக்கு ஒன்றரைகோடி வீடுகள் கட்டி வழங்கியுள்ளோம். ஆனால் எதிர்கட்சியினர் 25 லட்சம் வீடுகளே கட்டி கொடுத்துள்ளன. நாங்கள் தேசியவாதிகளாக இருப்போம்.

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இந்தியர்களுக்கு எதிரான சக்திகளுக்கு தேவையான விஷயமும், பயங்கரவாதிகளுக்கு சந்தோஷம் ஏற்பட்டுள்ளது. நம்மூரை சேர்ந்த அமைச்சர் இந்தக்குழுவில் இருந்துள்ளார். ஜாமின்பெறுவதே அவரது நோக்கம். அவரது தலைவர் ராகுலும் ஜாமினில்தான் இருந்து வருகிறார். காங்கிரஸ், தி.மு.க., இந்தியாவில் உள்ள நடுத்தர குடும்பத்தினர் மீது அக்கறை இல்லை. நடுத்தரக்குடும்பத்தினரை நசுக்குவதே குறிக்கோள். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் நடுத்தரகுடும்பம் குறித்து பேசப்படவில்லை. இருகட்சிகளுக்கு ஓட்டளித்தால் மீண்டும் மக்கள் மீதான வரியை அதிகப்படுத்தும். இதனை காங்கிரஸ் கட்சியினர் கூறுகின்றனர். வரியை உயர்த்த திட்டமிட்டுள்ளார்கள். ரீகவுண்டிங் அமைச்சர் ஏன் விலை வாசி உயர்வை பற்றி கவலைப்பட வில்லை.

எங்கள் ஆட்சியில் ஏழைமக்களுக்கு முத்ரா திட்டம், ஸ்டார்ட் அப் திட்டத்தின் மூலம் 59 நிமிடங்களில் கடன் வாங்கிட முடியும். நடுத்தர மக்களை நாட்டின் வளர்ச்சிக்காக பயன் படுத்துவேன். அருகில் இருக்கும் கேரள பாரம்பரியத்தை கம்யூ.,. கட்சியினர் இணைந்து அழிக்க செயல்படுகின்றனர். கேரள மக்களின் பாரம்பரியத்தை காப்போம். பா.ஜ., சிறு மற்றும் குறு தொழிலாளர்களை கைவிடாது. அவர்கள் கோரிக்கைகளை நிறை வேற்றுவேன். மக்களுக்கு பயன்படும் வகையில்தான் ஜி.எஸ்.டி.,அமைத்துள்ளோம். ஜி.எஸ்.டி.,யில் ஏற்படும் பிரச்னைகளை மாற்றுவோம். இதற்கு மக்களின் கருத்துக்களைகேட்க உள்ளோம். நெசவாளர்கள் மேம்பாட்டுக்கு 7ஆயிரம் கோடி வரை வழங்கியுள்ளோம். இது போல் தொழிற்சாலைகள் மேம்படுத்தவும் பலதிட்டங்களில் தமிழகம் 65 சதவீதம் பயன் அடைந்துள்ளது.

மகளிர் நலனையும் எங்கள் அரசு கவனிக்கிறது. காஸ் இணைப்பு வழங்கியுள்ளோம். கருவுற்றபெண்கள் விடுப்பு 26 வாரங்களாக உயர்த்தியுள்ளோம். திமுக காங்., மகளிருக்கு எதிரான கட்சிகள் , காங்., தலைவர்கள் பெண்களை இழிவுப்படுத்தி பேசியுள்ளனர். திமுக ஒரு மோசமானகட்சி. இவர்கள் ஜெயலலிதாவை தரக்குறைவாக பேசியுள்ளனர். மக்களின் ஆலோசனைப்படியே நாங்கள் கொள்கைகள் வகுக்கிறோம். நீரைசேகரிப்பது மிக முக்கியமானது. இதில் தமிழக யோசனையை ஏற்றுள்ளோம். தண்ணீர் பற்றாக்குறையை நீக்கிட நடவடிக்கை எடுத்து வருகிறோம். நீர்நிலைகள் காக்கப்படும்.

21ம் நூற்றாண்டில் இளம் தலைமுறையினர் ஓட்டளிக்கவுள்ளனர். தமிழகத்தில் 18 வயது நிரம்பிய இளம்தலைமுறை வாக்காளர்களை வரவேற்கிறேன். முதன்முதலாக பள்ளிக்குசெல்வதும், முதலில் பேசும் பேச்சு, வேலைக்கு சென்றுவாங்கும் முதல் சம்பளமும் மறக்க முடியாது. இது நல்ல காரியத்திற்கு பயன்படுத்துவது போல, முதல் ஓட்டையும் நல்லமுறையில் பயன்படுத்துங்கள். நாட்டின் வளர்ச்சிக்கும், நமது நாட்டின் தேசிய வாதிகளை பலப்படுத்தவும், முதல் ஓட்டு விவசாயிகள் மேம்பட உதவிட்டும். உண்மை மற்றும் ஸ்திரத்தன்மைக்கும் ஓட்டளியுங்கள். வளர்ச்சியில் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் மறக்கமுடியாத உங்கள் ஓட்டை குடும்ப அரசியல்வாதிகளுக்கு அளிக்காதீர்கள். நல்ல ஆட்சிக்கு அளித்தேன் என்ற திருப்தியை பெறுங்கள்.

13 கோடி மக்களுக்கு எங்கள் கூட்டணி மீது நம்பிக்கை வந்துள்ளது. ஒவ்வொரு இந்தியனும் நமது காவல்காரர்கள் தான். நாம் அனைவரும் ஒருங்கிணைந்து வலுவான பாரதத்தை உருவாக்க பாடுபடுவோம். நாற்பதும் நமதே, நாடும் நமதே (தமிழில்)

பிரதமர் மோடி கோவை பொதுக்கூட்டத்தில் பேசியது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *