இந்தியா சுதந்திரம்பெற்ற போது வளமான மாநிலமாக இருந்த பிகார் தற்போது ஏழை மாநிலமாகி விட்டது என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

அசாம் மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தேர்தலுக்கான பிரசாரத்தை பிரதமர் மோடி இன்று துவக்கியுள்ளார்.

தின்சுகியாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய மோடி, இந்தியா சுதந்திரம் பெற்ற போது, வளமான மாநிலமாக பிகார் திகழ்ந்தது. ஆனால், தற்போது ஏழைமாநிலங்களில் ஒன்றாகிவிட்டது.

நீர் வளம் மிகுந்த மாநிலத்தில், மக்கள் தண்ணீருக்காக கஷ்டப்பட்டு கொண்டிருக்கின்றனர். இந்தியா சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகாலம் ஆகியும், அசாமில் இன்னமும் 2000 கிராமங்களுக்கு மேல் மின்சாரவசதி செய்து தரப்படவில்லை என்று குற்றம்சாட்டினார்.

Leave a Reply