பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திடு வதற்கான நிகழ்ச்சி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நேற்று முன்தினம் நடைபெற்றது. ஐ.நா. பொதுச்செயலாளர் பான் – கீ-மூன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கலந்துகொண்டார்.

மேலும் மத்திய மின்துறை மந்திரி பியூஸ் கோயல் மற்றும் அதிகாரிகள் பலரும் இதில் கலந்துகொண்டனர்.

இந்நிலையில், வளரும் நாடுகளின் உதவிக்காக 10 ஆயிரம்கோடி டாலர் மதிப்பிலான சோலார் மின்உற்பத்தி திட்டத்தை இந்தியா-பிரான்ஸ் நாடுகள் கூட்டாக அறிமுகப் படுத்தியுள்ளது. சர்வதேச சோலார் கூட்டணியில் உள்ள உறுப்பினர்கள் இதற்கான தொகையை முதலீடுசெய்ய உள்ளது. சோலார் கூட்டணி சார்பில் அறிமுகப்படுத்தப்படும் இரண்டாவது திட்டம் இது.

எதிர் காலத்தில் வரவிருக்கும் மனிதசமுதாயம் இதுவரை பார்த்திராத மின் தட்டுப் பாட்டை எதிர்கொள்ளும் வகையில் சர்வதேச சோலார் கூட்டணி இந்ததிட்டத்தை தொடங்கியுள்ளதாக பியூஸ் கோயல் கூறினார்.

சர்வதேச சோலார் கூட்டணியில் அமெரிக்கா, பிரேசில், வங்கதேசம், நைஜிரியா உள்ளிட்ட 25 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர். சோலார்கூட்டணி கடந்த ஆண்டு பிரதமர் நரேந்திரமோடி மற்றும் பிரான்ஸ் அதிபர் பிரான்சிஸ் ஹாலண்டே ஆகியோரால் தொடங்கப்பட்டது.

Leave a Reply