சென்னை மெட்ரோ ரயில் விரிவாக்கப்பணிகளில் கலந்துகொண்ட மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு, வளர்ச்சிதான் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் தாரக மந்திரம் என குறிப்பிட்டார்.

விழாவில் பங்கேற்று பேசிய மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் வெங்கைய்ய நாயுடு, வண்ணாரப்பேட்டை முதல் விம்கோநகர் வரையிலான மெட்ரோ ரயில் விரிவாக்கத்திட்டத்தை முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். வளர்ச்சிதான் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் தாரகமந்திரம் என குறிப்பிட்ட அவர், நாட்டின் வளர்ச்சியை உறுதிசெய்வதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு  திட்டங்களில் ஒன்றாக மெட்ரோரயில் திட்டம் உள்ளதாக தெரிவித்தார். மாநிலங்களின் வளர்ச்சி இல்லாமல், நாட்டின் வளர்ச்சி இல்லை , வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் திகழ்வதாக பாராட்டு தெரிவித்தார்.

Leave a Reply