கேரளத்திலிருந்து கோவை வழியாக செல்லும் பைபாஸ்சாலையில் வாகன விபத்தில் காயமடைந்த 3 பேரை, அந்த வழியாக சென்ற மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் மீட்டு மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்தனர். கோவையில் பிப்ரவரி 2-ம்தேதி பிரதமர் நரேந்திர மோடி நிகழ்ச்சிகள் இருப்பதால், அதற்கான ஆயத்தப்பணிகளில் பாஜக தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில் கேரளமாநிலம் பாலக்காட்டில் அரசு நிகழ்ச்சி ஒன்றில் பாஜக மூத்த தலைவரும், மத்திய இணை அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று காலை கொச்சின் பைபாஸ்சாலை வழியாக கோவை புறப்பட்டார். கோவை மாவட்டம் செட்டிபாளையம் அருகே பைபாஸ் சாலையில் அவரது கார் வந்து கொண்டிருந்தது. அப்போது மாநகராட்சி குப்பைலாரி ஒன்று எதிர்திசையில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்தது. லாரிநிற்பதை அறியாமல் வந்த இருசக்கர வாகனம் ஒன்று லாரியின் பின்புறம் மோதி விபத்துக் குள்ளானது.

அடுத்ததாகவந்த மற்றொரு இருசக்கர வாகனமும் இவ்விபத்தில் சிக்கியதால் 3பேர் காயமடைந்தனர். அப்போது எதிர் திசையில் கோவைநோக்கி வந்து கொண்டிருந்த அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், காரை நிறுத்தி கட்சிநிர்வாகிகள், போலீஸாருடன் இணைந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டார். பின்னர், முதலுதவி சிகிச்சைக்காக பாதுகாப்புக்குவந்த போலீஸ் வாகனத்திலேயே அவர்களை அருகில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்தார்.

Leave a Reply