அதிமுக. தயவில் ராஜ்ய சபா எம்.பி. பதவி கிடைத்துள்ளதால் வாசனும் அவரது கட்சியினரும் இன்பஅதிர்ச்சி அடைந்துள்ளனர். சட்ட சபையில் பிரதிநிதித்துவம் இல்லாத த.மா.கா.,வுக்கு அ.தி.மு.க. பாஜக கூட்டணி திடீர் அங்கீகாரம் அளித்துள்ளது.

மற்ற இருபதவிகளை தங்கள் கட்சியைச் சேர்ந்த சீனியர்களான தம்பிதுரை, முனுசாமிக்கு அளித்துள்ளனர்.  தமிழகத்தில் இருந்து ஆறு ராஜ்யசபா எம்பி.க்களை தேர்வுசெய்வதற்காக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கை அடிப்படையில் அதிமுக. – தி.மு.க. சார்பில் தலா மூன்று எம்.பி.க்கள் தேர்வுசெய்யப்பட உள்ளனர்.

இதற்கிடையில் கூட்டணி கட்சிகளான தேமுதிக. – த.மா.கா. மற்றும் புதிய நீதிக்கட்சி தரப்பிலும் எம்.பி. பதவி கேட்கப்பட்டது. இதில் த.மா.கா., தலைவர் வாசனுக்கு சீட் வழங்கும்படி பா.ஜ. மேலிடம் பரிந்துரைசெய்தது. எனவே அவருக்கு மட்டும் வாய்ப்பு வழங்க வேண்டிய கட்டாயம் அ.தி.மு.க., தலைமைக்கு ஏற்பட்டது.

ஒரு எம்.எல்.ஏ கூட இல்லாத தாமாக.,வுக்கு ஒரு ராஜ்ய சபா தொகுதியை ஒதுக்கியுள்ளதை போன்று. 7 எம்.எல்.ஏ.,க்களை கொண்ட காங்கிரஸ்க்கு ஏன் ஒதுக்க கூடாது என்று காங்கிரஸ் கட்சி தலைவர்களிடம் ஆசைகள் ரெக்கை கட்டி பறக்கிறது. தி.மு.க.,வுக்கும் இது தர்மம் சங்கடங்களை ஏற்படுத்தியும் உள்ளது.

Comments are closed.