இருநாள் பயணமாக தனது பாராளுமன்ற தொகுதியான வாரணாசிவந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி பழைய காசி நகரத்துக்கு ஒருங்கிணைந்த மின்சார மேம்பாட்டுதிட்டம் பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் புதிய கண் மருத்துவமனை, பச்சிளம் குழந்தைகளை கதகதப்பாக வைக்கும் ‘இன்கு பேட்டர்’ அறை ஆகிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

 

இந்நிகழ்ச்சியில் பேசிய மோடி, வாரணாசி நகரம் கடந்த நான்காண்டுகளில் அடைந்துள்ள வளர்ச்சியை தெளிவாக காணமுடிவதாக குறிப்பிட்டார்.


இதேபோல், பழம் பெருமை வாய்ந்த காசி நகரத்தை அதன் பாரம்பரிய சிறப்பு மாறாமல் நவீனப் படுத்த வேண்டும் என்பது நமது குறிக்கோளாகும். கடந்த நான்காண்டுகளில் அந்ததிட்டமும் நிறைவேறியுள்ளது.

உத்தரப்பிரதேசத்தின் முதல் மந்திரியாக யோகி ஆதித்யாநாத் பொறுப்பேற்ற பிறகு இந்தபணிகள் எல்லாம் வேகம் கண்டுள்ளன. வாரணாசி நகரின் மேலே செல்லும் மின்கம்பிகள் எல்லாம் மாற்றப்பட்டு தரைக்கு அடியில் செல்லும் கேபிள்களாக மாற்றப் பட்டிருக்கிறது. கங்கோத்ரியில் இருந்து கங்காசாகர் வரை கங்கை ஆற்றை தூய்மைப்படுத்தும் திட்டங்களுக்கு இதுவரை 21 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளோம்.

விஸ்வநாதர் மற்றும் கங்கைத்தாயின் ஆசிகளுடன் இன்னும் ஓராண்டு நாட்டுக்காக பணி யாற்றும் வாய்ப்பு எனக்கு மிச்சம் உள்ளது. இவற்றுடன் நாட்டு மக்களான உங்களது அன்பும், வாழ்த்துகளும் இந்த நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் பணியாற்றும் உத்வேகத்தை எனக்கு அளித்துவருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published.