பெருமளவில் வாராக்கடன்கள் பெருக முக்கியகாரணம், முன்னர் இருந்த காங்கிரஸ் தலைமையிலான அரசுதான் என பாஜக தேசிய தலைவர் அமித் ஷா இன்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் வரும் டிசம்பர் 7 ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது.இந்நிலையில், அமித்ஷா, இன்று நாகவுர் பகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றினார். இதில் பேசியவர்,”காங்கிரஸ் ஆட்சிபுரிந்த காலத்தில் வழங்கப்பட்ட கடன்கள் தான், தற்போது வாராக் கடன்களாக உள்ளன. இந்த கடன்கள் நரேந்திர மோடி தலைமையிலான அரசின்கீழ் வழங்கவில்லை.

இது அப்போதைய காங்கிரஸ் அரசின் மிகப் பெரிய பிழை” என்று குற்றஞ்சாட்டினார். ”ஒரு நிறுவனத்திற்கு ஆயிரக்கணக்கான கோடி அப்போது கடனாக வழங்கப்பட்டது. அதற்கு நேருகுடும்பத்தின் மருமகனுக்கு சில மாதங்களில் கமிஷன் வழங்கப்பட்டுள்ளது. அதை வைத்துக்கொண்டு பிகேனர் பகுதியில் 370 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டது. இதுகுறித்து ராகுல்காந்தி பதிலளிப்பாரா? என்று அமித் ஷா கேள்வி எழுப்பினார்.

நிரவ் மோடி, விஜய் மல்லையா குறித்து பேசிய அமித்ஷா,”காங்கிரஸ் ஆட்சியில் அவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லவில்லை. ஏனென்றால், அவர்களுக்கு காங்கிரஸ் அரசுமீது பயமே இல்லை. மோடி அரசு ஆட்சிய மைத்ததும், அவர்களுக்கு பயம் ஏற்பட்டுள்ளது. ஆகையால் தப்பிச்சென்றனர்” என்று அமித் ஷா குறிப்பிட்டார்.

Leave a Reply