பா.ஜ.க. தேசிய பொதுச் செயலாளரும், தமிழக பொறுப்பாளருமான முரளிதர ராவ் சென்னை கமலாலயத்தில் திங்கள்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார். 
 
அப்போது அவர் கூறியதாவது, தேர்தல்கூட்டணிக்காக பல கட்சிகளும் விஜய காந்தை அணுகி உள்ளது. நாங்களும் அணுகி உள்ளோம். எந்தகட்சிகளுடன் கூட்டணி என்று விஜயகாந்த் அறிவிக்க வில்லை. பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்றும் அவர் கூறவில்லை. எனவே பாஜக. கூட்டணிக்கு தேமுதிக. வரும் வாய்ப்புள்ளது.
 
தமிழக பாஜக.வில் முதல்–அமைச்சர் என்று யாரையும் முன்நிறுத்த வில்லை. எனவே விஜயகாந்த் ‘கிங்’காக இருக்கவேண்டும் என்று கூறியிருப்பதால், பா.ஜ.க. கூட்டணிக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை. தேசிய ஜனநாயக கூட்டணி நேற்று இருந்தது. இன்றும் இருக்கிறது. நாளையும் இருக்கும் என்றார்.

Leave a Reply