தமிழக சட்டசபை தேர்தல் மே மாதம் 16-ந் தேதி நடைபெற உள்ளது.  தேர்தல்தேதி நெருங்கி வருவதால் கட்சிகள் கூட்டணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இதனால், தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. 
 
தமிழக சட்டமன்ற தேர்தலில் தங்கள் கூட்டணிக்கு வருமாறு விஜய காந்துக்கு, தி.மு.க.-காங்கிரஸ், பாஜக., மக்கள் நலக் கூட்டணி கட்சிகள் வெளிப்படையாக அழைப்பு விடுத்துள்ளது. ஆனால், தே.மு.தி.க.வின் நிலைப்பாட்டை இது நாள் வரையில் தெரிவிக்காமல் மவுனம் காத்துவரும் விஜயகாந்த், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து கூட்டணி குறித்து தற்போது தீவிர ஆலோசனையில் இறங்கியுள்ளார்.
 
இந்நிலையில், விஜயகாந்தை முதல்வர் வேட்பாளாராக முன்னிறுத்த விரும் புவதாகவும், இதுகுறித்து பிரேமலதாவிடம் தொலைபேசியில் பிரகாஷ் ஜவடேகர் பேசியதாகவும், ஆங்கில இணையதளம் ஒன்றில் செய்திவெளியாகி இருந்தது. இந்த தகவல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இருப்பினும், இந்த தகவலை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் மறுத்து இருந்தார். 
 
இந்நிலையில், விஜயகாந்த் குறித்து நான் கூறியதாக வெளியான தகவலில் உண்மை யில்லை என்று மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்  அளித்த பேட்டியில், “  விஜயகாந்த் முதல்வர் வேட்பாளர் என நான் கூறவில்லை. தேர்தல்கூட்டணி குறித்து விஜயகாந்த் மற்றும் அவரது  குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. பேசியதாக வெளியான தகவலை முற்றிலும் மறுக்கிறேன்.  குறைந்தபட்ச செயல்திட்டம் பற்றியும் எதுவும் பேசவில்லை. பேசியதாக வெளியான தகவல் கண்டனத்திற் குரியது.  தவறான செய்திவெளியிட்டது குறித்து பிரஸ்கவுன்சிலிடம் புகார் அளிக்கஉள்ளேன்” இவ்வாறு அவர் தெரிவித்தார். 
 

Leave a Reply