தமிழக மக்கள் உழைப்பாள் உயர்ந்தவர்கள். எடுத்துக்கொண்ட காரியங்கள் எல்லாவற்றிலும் முழு ஈடுபாடோடு வெற்றியை நோக்கி செயல்படுத்துபவர்கள். செய்யும் தொழிலே தெய்வமென்று தெய்வத்தையும் போற்றும் தெய்வமாக தொழிலையும் போற்றும் அவர்கள் அத்தனை பேரும் அவர்கள் செய்யும் பணியிலும்,தொழிலும் இந்த விஜயதசமி மிகப்பெரிய வெற்றியை தரட்டும்.

 

                                          “மேக்கிங் இந்தியா” என்று இறக்குமதி செய்துகொண்டிருந்த இராணுவத்தின் ஆயுதங்கள் கூட இந்தியாவில் தயாரிக்க கூடிய மாபெரும் தொழிற் புரட்சியை மரியாதைக்குரிய நம் பாரதப் பிரதமர் மோடி அவர்கள் ஆட்சியில் நாம் கண்டு கொண்டிருக்கிறோம். ஆகையால் இந்த ஆயுதபூஜை நமக்கு சிறப்பானது.இந்த ஆயுதபூஜை  நாட்டிற்கும்,வீட்டிற்கும், தமிழ்நாட்டிற்கும் சிறப்பு சேர்க்க தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

 

                             அனைவருக்கும் இந்த ஆயுதபூஜை பல வெற்றிகளை குவிக்கும் வெற்றி திருநாளாக விளங்க வேண்டுமென தமிழக மக்கள் அனைவருக்கும் என் சரஸ்வதிபூஜை , ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

Leave a Reply