மாற்றுகட்சியில் இருந்து விலகிய 2 ஆயிரம்பேர் பா.ஜனதா கட்சியில் இன்று இணைந்தனர். சென்னை புரசைவாக்கம் தர்மபிரகாஷ் மண்டபத்தில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார்.

நிகழ்சசிக்கு பிறகு பொன். ராதாகிருஷ்ணன நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:–

நாடாளுமன்ற தேர்தலில் அமைந்த கூட்டணியைபோல் வருகிற சட்டமன்ற தேர்தலிலும் பா.ஜ.க கூட்டணி தொடரும். தேமுதிக. மாநாட்டில் விஜய காந்த் ‘கிங்’கா? ‘கிங் மேக்கரா?’ என்று தொண்டர்கள் மத்தியில் கேட்ட கருத்து பற்றி எங்களுக்கு கவலையில்லை.

முதல்–அமைச்சர் வேட்பாளராக முன்மொழிந்த கட்சிகள்தான் அதுபற்றி கவலைப்பட வேண்டும். விஜய காந்துடன் உள்ள எங்கள் கூட்டணி இன்னும் தொடர்கிறது.

பா.ஜனதா கட்சியில் போட்டியிடு பவர்களிடம் இன்னும் விருப்ப மனு வாங்கவில்லை என்று யாரும் கவலைப்பட தேவையில்லை. அதனை கட்சிமேலிடம் அதனை பார்த்துக் கொள்ளும்.

தி.மு.க.– காங்கிரஸ் கூட்டணி தேர்தல் வரை நீடிக்குமா? என்பது சந்தேகமே.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply