வரும் சட்டப்பேரவைத் தேர்தலில், மேலும் பல கட்சிகள் பாரதிய ஜனதா கட்சியோடு கூட்டணி அமைக்கும் என மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை கமலால யத்தில் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் முன்னிலையில் நடிகர் விஜய குமார்  கட்சியில் இணைந்தார். அப்போது, கட்சியின் தமிழகபொறுப்பாளர் முரளிதர ராவ், மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் அவருக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்றனர். 

பின்னர் செய்தியா ளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், நடிகர் விஜய குமாரின் வருகை பாரதிய ஜனதா கட்சிக்கு மேலும் பலம்சேர்க்கும். இந்திய மக்கள்கல்வி முன்னேற்றக் கழகத்தின் தலைவர் தி.தேவநாதன் யாதவுடன் கூட்டணி முடிவு செய்யப் பட்டதாக, பொன் ராதாகிருஷ்ணன் கூறினார். 

மேலும் கூட்டணிக்குவர தயாராக இருக்கும் கட்சிகளோடு பேச்சு வார்த்தையை தொடங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பாஜக. தேர்தல் அறிக்கை தயாராகி விட்டதாகவும், அதை கட்சிமேலிடம் விரைவில் வெளியிடும் எனவும் பொன் ராதா கிருஷ்ணன் கூறினார்.

Leave a Reply