'விண்வெளித் துறையில் இந்தியா அபரிமிதவளர்ச்சி கண்டுள்ளது,'' என, மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்தார்.


காரைக்குடி செல்லும்வழியில், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம்செய்தார். 'பா.ஜ., மக்கள் சேவை மையத்தை' பார்வையிட்டு, பொது மக்களிடம் மனுக்களை பெற்றார்.அவர் கூறியதாவது: மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ., பெற்றவெற்றி, பிரதமர் நரேந்திர மோடியின் பக்கமே மக்கள் இருப்பதை உணர்த்துகிறது. ஒடிசா உட்பட மாநிலங்களில் பழங்குடியினர் உட்பட எல்லா தரப்பினரும் மோடிக்கு ஆதரவாக உள்ளனர். '500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது' என்ற அறிவிப்பிற்குபின் நடந்த இத்தேர்தல்களில், பா.ஜ.,விற்கு கிடைத்துவரும் இந்த வெற்றி, கறுப்பு பணத்தை ஒழிக்க பிரதமர் மோடி எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக இருப்பதை காட்டுகிறது. தமிழகத்தை ஆளும்கட்சியாக பா.ஜ., வளரும்.இந்தியாவில் இருந்து, 104 செயற்கைகோள்கள் ஏவப்பட்டுள்ளன. இதில் அமெரிக்காவின் 90 செயற்கைகோள்கள், இந்தியாவில் இருந்து ஏவப்படும்அளவுக்கு விண்வெளித் துறையில் அபரிமித வளர்ச்சி கண்டுள்ளது.இவ்வாறு கூறினார்

Leave a Reply