பஸ்மாசுரன் தொடங்கி இரணியன் – இரண்யாட்சன் , இராவணன் – கும்பகர்ணன் , சூரபத்மன்வரை எல்லா அசுரர்களும் கடும் தவம் புரிந்து இறைவனிடம் வரம்பெற்றதாக படித்திருப்போம்….

பெரும்பாலும் பிரம்மா அல்லது சிவன் இந்த இருவரை நோக்கித்தான் தவம்செய்வார்கள்..மிகக்கடுமையான இவர்களின் தவத்தால் மனம் மகிழ்ந்த பிரம்மாவும் ,சிவனும் அசுரர்கள் கேட்கும் வரத்தை கொடுப்பார்கள்..

ஆனால் , எந்த அசுரனாவது விஷ்ணுவைவேண்டி த‌வமிருந்து வரம் பெற்றதாக படித்திருக்கிறோமா?

இருக்காது…காரணம் , என்ன தவம்செய்தாலும் விஷ்ணுவிடம் நம் தகுதிக்கு தக்கது எதுவோ , அதை மட்டுமே பெற முடியும்…கடும்தவம் செய்வதால் மட்டும் அவரை மயக்கிவிட முடியாது… [ உடனே அப்போ பிரம்மாவும் சிவனும் விபரமற்ற தெய்வங்களான்னு கிளம்பவேண்டாம்…விஷ்ணு காக்கும் கடவுள்…யாரிடம் என்ன வரம் பெற்றாலும் அதை ஆராய்ந்து , அவரவருக்கு உரியதை அவரவர்க்கு வழங்குவதே விஷ்ணுவின் பணி..]

விஷ்ணுவின் பாதத்தையே இருபத்திநாலு மணிநேரமும் பிடித்துக்கொண்டு கிடந்தாலும் , நம் கர்மாவுக்கு உரியதை நாம் அனுபவிக்காமல் தப்பவே முடியாது…எம்பெருமான் அதில் தலையிடுவதும் இல்லை…

மஹாபாரதத்தில் கண்ணன் பாண்டவர்கள் கூடவேதான் இருந்தார்…ஆனால் அபிமன்யு கொல்லப்படுவதையோ , அஸ்வத்தாமனால் இளம்பாண்டவர்கள் வதம் செய்யப்படுவதையோ , அவர் தடுக்கவே இல்லை…காரணம் , விதியின் போக்கு அது….அதில் அவர் தலையிடுவதே இல்லை…

என்ன நடந்தாலும் விதிப்படிதான் நடக்கும்னா , அப்ப எதுக்கு கோயிலுக்குப்போகனும்னு அடுத்த கேள்வி வரும்…

இதுவரை நடந்தது எல்லாமே நம் கர்மாப்படி நடக்கிறது … அதை நம்மால் மாற்றவும் முடியாது…ஆனால் , இனி நடக்க இருப்பதை , நம்மால் இயன்றவரை சீரமைக்கலாமல்லவா? அதற்காகத்தான் இறை வழிபாடு… நம்மை மீறிய சக்திஒன்று நம்மை வழிநடத்துகிறது என்பதை உணரும்போது , நாம் தவறுசெய்தால் தண்டனை நிச்சயம் என்பதும் உறுதி…எனவே இயன்றவரை பிறருக்கு எந்தத்தீங்கும் இழைக்காமல் , நம் அளவில் நல்லவராக , மனசாட்சிப்படி நடக்கவைப்பதுதான் இறைவழிபாட்டின் நோக்கம்…இறைவன் அருள் நமக்கு இருக்கிறது… இனி என்ன ஆட்டம் வேண்டுமானாலும் போடலாம் என்று நினைத்தால் எழவே முடியாத அடி விழும்..அதைச்செய்வதும் எம்பெருமானே…

மேலே சொல்லிய விஷயம் எல்லாமே இறைநம்பிக்கை உள்ளவர்க்கு மட்டுமே…இறைவன் அடியார்களுக்கே இத்தனை நிபந்தனைகள் உள்ளபோது , இறைவனை நிந்திப்பவர்களின் கதி என்னவாக இருக்கும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை…

ஒருபக்கம் மனைவியை கோயில் கோயிலாக அனுப்பிவிட்டு , இன்னொரு பக்கம் ஹிந்து மதத்தையும் , ஹிந்து கடவுள்களையும் இழித்துப் பேசும் கும்பலோடு உறவாடுவது …அப்புறம் சத்தமில்லாமல் யாகம் செய்வது…. அதில் கலந்துகொள்ள வருவதிலும் ஒரு திருட்டுத்தனம்… வேறு வேலையாக வருவதுபோல பித்தலாட்டம்…நெற்றியில் வைக்கப்பட்ட பொட்டை அழிப்பது…

விநாச காலே விபரீத புத்தி… வேறென்ன?

Tags:

Leave a Reply