நாடுமுழுவதும் அதிகரித்து வரும் விபத்துகளைக் குறைப்பதற்காக, சாலை மேம் பாட்டுக்காக அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.11 ஆயிரம்கோடி செலவிடப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஜனவரி 11 முதல் 17வரை சாலைபாதுகாப்பு வாரம் கடை பிடிக்கப்படுகிறது. இதன் தொடக்க நாளான நேற்று, டெல்லியில் உள்ள இந்தியாகேட் பகுதியிலிருந்து விழிப் புணர்வு பிரச்சார நடைப் பயணம் தொடங்கியது. இதில் கலந்துகொண்ட மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியதாவது:

உலகம் முழுவதும் ஆண்டுதோறும் அதிகளவில் சாலைவிபத்து நடைபெறும் நாடுகளில் ஒன்றாக இந்தியா விளங்குகிறது. குறிப்பாக, நம் நாட்டில் ஒருஆண்டில் சுமார் 5 லட்சம் விபத்துகள் ஏற்படுகின்றன.

இதில் 1.5 லட்சம்பேர் பலியாகிறார்கள். மேலும் 3 லட்சம் பேர் படுகாய மடைகிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் 25 முதல் 33 வயதுக் குட்பட்டவர்கள். போரின் போது கூட இவ்வளவு மக்கள் உயிரிழப்பதில்லை. இது மிகவும் கவலைதருவதாக உள்ளது.

சாலை விபத்துகளால் ஆண்டுக்கு ரூ.60 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுகிறது. எனவே, விபத்துகளை குறைப்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. இது போன்ற சாலைமேம்பாட்டு திட்டங்களுக்காக அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.11 ஆயிரம் கோடி செலவிடப்படும்.

நாட்டில் உள்ள ஓட்டுநர் உரிமங்களில் 30 சதவீதம் போலியானவை என கண்டறியப் பட் டுள்ளது. இதைத்தடுக்கும் வகையில், மின்னணு முறையில் உரிமம்வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பொருத்த வரையில், கார்களில் ‘ஏர்பேக்’, லாரி கேபின்களில் ஏ.சி. வசதி ஆகியவை கட்டாய மாக்கபடும். மேலும் கொரியாவில் உள்ளதுபோல எடைகுறைவான ஹெல்மெட் கண்டுபிடிப்பது குறித்து கவனம் செலுத்தப்படும்.

சாலைவிதிகளை கடைபிடிக்கு மாறு பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கப்படும். மேலும் விபத்தை குறைக்க வகைசெய்யும் சாலை போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப் படும்.

மொத்தத்தில் விபத்துகளை 50 சதவீதம் குறைக்க இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது. போக்குவரத்து விதிகளை மீறுவோரை கண்டுபிடிப்பதற்காக 12 நகரங்களில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு வருகிறது.

ஸ்வீடனில் கடந்த ஆண்டு ஒரே ஒருவிபத்துதான் ஏற்பட்டது. அந்த நாட்டிடமிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். என்று அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறும் போது, “4 நிமிடத்துக்கு ஒருமுறை சாலை விபத்தால் ஒருவர் மரணம் அடைகிறார். இதைத்தடுக்க வேண்டும்” என்றார்.

Tags:

Leave a Reply