மோசமானவானிலை காரணமாக, பிரதமர் மோடி விமானத்தில் இருந்தபடியே தொலைபேசி மூலம் பொதுக் கூட்டத்தில் உரையாற்றினார்.

உத்தரப்பிரதேச மாநிலம் பஹ்ரெய்ச்சில் பாஜக சார்பில் தேர்தல்பிரச்சார கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் பஹ்ரெய்ச்சில் மோசமான வானிலைநிலவியது. இதனால் மோடியின் விமானம் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து பிரதமர் மோடி, விமானத்தில்இருந்தபடியே தொலைபேசி மூலம் பொதுக் கூட்டத்தில் உரையாற்றினார். இந்ததொலைபேசி அழைப்பை, பாஜக தலைவர் கேசவ்பிரசாத் மவுரியா மைக் மூலம் பொதுமக்களுக்கு ஒலிபரப்பிக் காட்டினார்.

Leave a Reply