''புதிய இடங்களுக்கு விமானங்களை இயக்க தனியார்நிறுவனங்கள் முன்வந்தால், அங்குவிமான நிலையம் அமைக்க மத்திய அரசுதயாராக உள்ளது,'' என, இணை அமைச்சர் ஜெயந்த்சின்ஹா தெரிவித்தார்.

மதுரையில் அவர் கூறியதாவது: மதுரையில் விமானபயணிகள் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. மதுரைக்கு பன்னாட்டு விமானங்கள் வந்து செல்வதற்கான ஒப்பந்தங்கள் குறித்த பேச்சு வார்த்தைக்கு முயற்சிகள் நடக்கின்றன; மதுரைக்கு, விரைவில் பன்னாட்டு விமானங்கள்வரும்.


விமானத்தில் தவறாக நடக்கும் பயணிகளுக்கு தடைவிதிப்பது குறித்து அரசு பரிசீலிக்கிறது. நாடுசுதந்திரம் அடைந்ததற்கு பின் 20 விமான நிலையங்கள் இருந்தன; பாஜக., ஆட்சியில் 200 கோடி ரூபாயில் 15 விமான நிலையங்கள் உருவாக்கப் பட்டுள்ளன. தனியார் நிறுவனங்கள் புதிய இடத்திற்கு விமானங்களை இயக்க முன் வந்தால், அங்கு விமான நிலையம் ஏற்படுத்த அரசு தயாராக உள்ளது, என்றார்.

Leave a Reply