இந்தியா — ஆஸ்திரேலியா உச்சிமாநாட்டில், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட்
மோரிசனுடன், ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக, பிரதமர் நரேந்திரமோடி உரையாடினார். ‘அப்போது, நாட்டின் பல்வேறு துறைகளிலும், விரிவான சீர்திருத்த நடவடிக்கைகளை துவங்க, கொரோனா நெருக்கடி, வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத் திருப்பதாக, தெரிவித்தார்.

ராணுவம், வர்த்தகம், சுகாதாரம் ஆகியதுறைகளில், இந்தியா — ஆஸ்திரேலியா இடையிலான உறவை வலுப்படுத்தும் நோக்கத்தில், இருநாடுகள் இடையிலான உச்சி மாநாடு, நேற்றுநடந்தது.இதில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர், ஸ்காட் மோரிசன், ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக சந்தித்து, உரையாடினர்.

அப்போது, பிரதமர் நரேந்திரமோடி கூறியதாவது:இந்தியா — ஆஸ்திரேலிய உறவை, மேலும் வலுப்படுத்த, சரியான நேரத்தில், சரியானசந்தர்ப்பம் அமைந்துள்ளதாக நம்புகிறேன். இந்த உறவை, விரைவாகவும், விரிவாகவும் வலுப்படுத்துவதில், இந்தியா உறுதி கொண்டுள்ளது.

கொரோனா பாதிப்பால், உலகம்முழுதும், சமூக மற்றும் பொருளாதார ரீதியிலான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. ஒத்துழைப்புடன் கூடிய, கூட்டுமுயற்சியால் மட்டுமே, இதிலிருந்து மீள முடியும். இந்தசந்தர்ப்பத்தில், மற்ற நாடுகளுடன் நல்லுறவை வலுப்படுத்துவது அவசியமாகிறது.

நாட்டின் பல்வேறு துறைகளிலும், விரிவான சீர்த்திருத்தங்களை துவங்க, இந்த கொரோனா நெருக்கடி வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத் திருப்பதாகவே கருதுகிறேன். இதன் முடிவுகள், விரைவில் தெரிய வரும்.தொற்று தீவிரம்அடைந்த காலக்கட்டத்தில், ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்தியமக்கள், குறிப்பாக மாணவர்கள் மீது, அக்கறை எடுத்துக் கொண்டதற்கு,ஆஸ்திரேலிய அரசுக்கு நன்றி.இவ்வாறு, அவர்கூறினார்.

Comments are closed.