விரைவில் கற்றுக்கொண்டு பேசுவேன் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யநாயுடு எழுதிய புத்தகவெளியீட்டு நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்று வருகிறது. மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, பிரகாஷ் ஜாவடேகர், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், ரஜினி உள்ளிட்டோர் இதில் பங்கேற்றுள்ளனர்.

நிகழ்ச்சியில் பேசிய அமித் ஷா, வெங்கய்ய நாயுடுவிடம் இருந்து நான் ஏராளமாக கற்றுக் கொண்டுள்ளேன். இந்த விழாவில் ரஜினி பங்கேற்றது மிக்கமகிழ்ச்சி அளிக்கிறது. அமைச்சராகவோ, பாஜக தலைவராகவோ இங்கு நான் வரவில்லை; மக்கள் பணியில் முன்னுதாரணமாக உள்ள வெங்கய்ய நாயுடுவின் மாணவராக வந்துள்ளேன். இந்த விழாவில் தமிழில் பேச நினைத்தேன், ஆனால் என்னால் பேசமுடியவில்லை. விரைவில் கற்றுக்கொண்டு பேசுவேன்.

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக மாணவர் பருவத்திலேயே போராடியவர் வெங்கய்யநாயுடு. காஷ்மீர் மசோதாவை வெங்கைய்ய நாயுடுவின் சீரியதலைமையால் மாநிலங்களவையில் முதலில் நிறைவேற்றினோம். 370 ரத்துக்கு பிறகு, மற்றவர்களுக்கு குழப்பம், ஆனால் நான் தெளிவாக இருந்தேன்; இனி காஷ்மீரில் பயங்கரவாதம் ஒழியும் என நம்புகிறேன். காஷ்மீர் இனி வளர்ச்சியைநோக்கி நடைபோடும். இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.