நமது நாட்டில் உள்ள விவசாயிகளின் பொருளா தாரத்தை இருமடங்காக உயர்த்துவதில் மத்திய அரசு முனைப்போடு இருக்கிறது' என்று டெல்லியில் நடந்த தேசியளவிலான கருத்துரங்கில் உரையாற்றினார் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், `விவசாயத் துறையை முன்னேற்றுவது குறித்து அரசுக்கு அதிகஅக்கறை இருக்கிறது. குறிப்பாக, நாட்டின் கிராம பொருளாதாரத்தை முன்னுக்குக்கொண்டு வருவதில் மத்திய அரசு அதிக கவனம் செலுத்திவருகிறது. விவசாய சமூகம், உலகம் முழுவதும் பெருமைக் குரியதாகவே போற்றப்படுகிறது. மேலும், நமது நாட்டின் பொருளாதாரம் விவசாயத்தின் வளர்ச்சியை வைத்தே இருக்கிறது. நமதுவிவசாயிகளின் பொருளாதாரத்தை இரு மடங்காக உயர்த்த இந்த அரசு முனைப்புடன் இருக்கிறது. மிகவும்முன்னேறிய நாடுகள் விவசாயிகளுக்கு நேரடியான மானியங்களை வழங்குகிறது. அதேபோல, பயிர்களுக்கு சேதாரம் ஏற்படும் நிலையில், காப்பீட்டுத்தொகை கொடுத்து அவர்களின் வாழ்வாதாரத்தை  காப்பாற்றுகிறது. அதேபோன்ற ஒன்றை இங்கும் அமல்படுத்த, உரியநடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன' என்று உரையாற்றினார்.

Leave a Reply

Your email address will not be published.