5 ஏக்கருக்கும் குறைவாக நிலம்வைத்துள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித் தொகை வழங்கும் திட்டத்தை பிரதமா் நரேந்திர மோடி உத்தர பிரதேசம் மாநிலத்தில்   தொடங்கி வைத்தாா்.

அண்மையில் மத்திய அரசு தாக்கல்செய்த இடைக்கால நிதிநிலை அறிக்கையில் சில முக்கியத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதில் 5 ஏக்கருக்கும் குறைவாக விவசாய நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என்று தொிவிக்கப்பட்டது.

ஒருதவணைக்கு ரூ.2 ஆயிரம் வீதம் மூன்று தவணையில் இந்ததொகை விவசாயிகளின் வங்கி கணக்குகளில் நேரடியாக செலுத்தப்படும் என்றும், இந்ததிட்டம் நடப்பு ஆண்டில் இருதே நடைமுறைப் படுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.

இந்நிலையில் உத்தர பிரதேசம் மாநிலம் கோரக்பூரில் இன்று நடைபெற்ற விழாவில் பிரதமா் நரேந்திரமோடி கலந்துகொண்டாா். இந்த விழாவில் விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்தாா்.

Tags:

Leave a Reply