விவசாயிகளுக்கு ஆதரவான மத்தியபட்ஜெட், 5 மாநில சட்டப் பேரவைத் தேர்தலுக்கு உதவும் என பாஜக எம்.பி.க்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

 எதிர்க் கட்சிகளின் குற்றச் சாட்டுகளை மங்கச்செய்து, தமிழகம், கேரளம் உள்பட 5 மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டப் பேரவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பொதுபட்ஜெட் உதவும் என்று பாஜக எம்.பி.க்கள் நம்பிக்கை தெரிவித்தனர். தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் முதல் எம்.பி.க்கள் குழுக்கூட்டம் தில்லியில் செவ்வாய்க் கிழமை நடைபெற்றது.

 இந்த கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி, பிரதமர் நரேந்திரமோடி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 இது குறித்து கட்சி வட்டாரங்கள் கூறியதாவது: எதிர் வரும் சட்டப்பேரவை தேர்தலுக்கு மத்திய நிதிநிலை அறிக்கை உதவும் என்று எம்பி.க்கள் நம்பிக்கை தெரிவித்தனர். புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் விவசாயிகளை கொண்டு வர எம்.பி.க்கள் பாடுபடவேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டார்.

Leave a Reply