தஞ்சை சட்ட சபை தொகுதி பாஜ வேட்பாளர் ராமலிங்கத்தை ஆதரித்துதிலகர் திடல் மார்க்கெட், கீழவாசல் மார்க்கெட், வல்லம் அண்ணாசிலை ஆகிய இடங்களில் மாநில தலைவர் தமிழிசை சவுந்தர் ராஜன் நேற்று பிரசாரம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:பாஜ அரசு, டெல்டாமாவட்ட விவசாயிகளை பாதிக்கும் மீத்தேன் திட்டத்தை ரத்துசெய்துள்ளது. தமிழகத்தில், விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதற்கு அதிமுக அரசுதான் காரணம். பயிர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகள் செலுத்திய பிரிமிய தொகையை முறையாக மாநில அரசு பெற்றுத் தராததே விவசாயிகளின் தற்கொலைக்கு காரணம். மாநில அரசு விவசாயிகளை பாதுகாக்க தவறிவிட்டது. விவசாயிகளை பாதுகாப்பதில் தமிழக அரசு 20வது இடத்திலும், தொழில்தொடங்குவதற்கு 18வது இடத்திலும் உள்ளது.

தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்படவில்லை. தேர்தல் ஆணையம் இவ்வளவு கட்டுப் பாடுகளை விதித்தும் ஆளும் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்துவருவதாக தகவல்கள் வருகிறது. அரசு அலுவலகங்களில் வசூல் ஆகும் பணத்தை ஆளும் கட்சியினர் வாங்கி வந்து இடைத்தேர்தல் நடக்கும் தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்கின்றனர். இதை தேர்தல் ஆணையம் தடுக்க வேண்டும்.  இவ்வாறு தமிழிசை கூறினார்.

Tags:

Leave a Reply