விவசாயிகள் போராட்டம் தொடர்பாக மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திரமோடி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். புதியவேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்திவருகின்றனர். கடந்த 26ம் தேதி குடியரசு தினத்தன்று விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் கலவரம் ஏற்பட்டது. போலீசார் மற்றும் விவசாயிகள் இடையே மோதல்வெடித்தது. இதில் 300க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்தனர்.

கலவரத்தில் ஈடுபட்டதாக விவசாயிகள் பலர் கைதுசெய்யப்பட்டனர். குடியரசு தின வன்முறைக்கு பிறகும் டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டம் நிறுத்தப்படவில்லை. இதற்கிடையே, விவசாயிகள் போராட்டம் தொடர்பாக நாடாளுமன்ற இரு அவைகளிலும், எதிர்க் கட்சிகள் அமளியில் ஈடுபடுவதால், அவைகள் ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. இதனால், மத்தியபட்ஜெட் கூட்டத்தொடர் தொடர்ந்து நடைபெறுவதில் சிக்கல் நிலவுகிறது.

இந்நிலையில், விவசாயிகள் போராட்டம்தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வேளாண்த் துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்களுடன் உயர்மட்ட ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். விவசாயிகள் போராட்டத்தை எப்படி தடுப்பது? போராட்டத்தை தடுக்க என்ன செய்யலாம் என்பது குறித்து ஆலோசிக்கப்படுவதாக தெரிகிறது.

Comments are closed.