விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாக வளர பிரதமர் நரேந்திர மோடி 7 யோசனைகளை வெளியிட்டுள்ளார். இதற்கு ஏற்ப பாசனதிட் டங்களை மேம்படுத்துவது, தரமான விதைகளை அளிப்பது, அறுவடைக்கு பிறகான சேதங்களை தவிர்ப்பது போன்றவற்றில் புதியமுறைகளை மேற்கொள்கிற பட்சத்தில் விவசாயிகள் வருமானம் அடுத்த ஆறு ஆண்டுகளில் இரட்டிப்பாக வளரும் என்று குறிப்பிட்டுள்ளார்.

டெல்லியில் நடந்த புளூம்பெர்க் இந்திய பொருளாதார மாநாட்டில் பேசிய பிரதமர், கடந்தகாலங்களில் விவசாயிகளின் வருமானம் குறைவாக இருந்துள்ளது. இதை 2022 ஆண்டுக்குள் இரண்டுமடங்காக அதிகரிக்க அரசு இலக்கு வைத்துள்ளது. இது மிகப்பெரிய சவால் என்றும் குறிப்பிட்டார்.

சிறந்த உத்திகளோடு இந்ததிட்டத்தை மிகதெளிவாக வடிவமைத்துள்ளோம். இதை நடை முறைப் படுத்துவதற்கு போதுமான வளம், திறமையான நிர்வாகம் உள்ளதால் இந்தஇலக்கு நிச்சயம் நிறைவேறும் என்றும் குறிப் பிட்டார்.

பிரதமர் மோடி குறிப்பிட்ட 7 முக்கிய உத்திகள் பின்வருமாறு:


பாசன திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். அதிகநிதி ஒதுக்கப்படும். ஒவ்வொரு துளியிலும் பயிர் என்பதுதான் இலக்கு.

ஒவ்வொரு பகுதியின், மண்வளம் சார்ந்து தரமான ஊட்டச்சத்தான விதைகளை அளிப்பு.

கிடங்கு பாதுகாப்பில் மிகப்பெரிய முதலீடு. தொடர் குளிர்பதன வசதியின் மூலம் அறுவடைக்குபின் சேதாரங்களை தவிர்ப்பது.

உணவு பதப்படுத்தல் துறையில் மதிப்புக்கூட்டு பொருட்களை ஊக்கப்படுத்துவது.

தேசிய அளவிலான விவசாயசந்தையை உருவாக்குவது. இடைத்தரகர்களை நீக்கி நாடுமுழுவதும் 585 இணைய சந்தையை உருவாக்குவது.

புதிய பயிர்காப்பீடு திட்டத்தைக் கொண்டுவருவது. இதன் மூலம் காப்பீட்டுக்கான ரிஸ்க் குறைந்து மலிவுவிலையில் கிடைக்கும்.

தேனிவளர்ப்பு, கோழி, மீன் வளர்ப்பு உள்ளிட்ட விவசாய துணை தொழில்கள் ஊக்கப்படுத்தப்படும்.

இந்ததிட்டங்களின் மூலம் விவசாயிகளின் வருமானத்தை இரண்டுமடங்காக அதிகரிக்கும் இலக்கை எட்டமுடியும் என தான் நம்புவதாக மோடி குறிப்பிட்டார். மேலும் வேளாண்விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் தனக்கு கடிதம் எழுதியுள்ள தாகவும், இதில் இந்த கொள்கையில் விவசாயிகளை மையப்படுத்திய புதியவருமானம் சார்ந்த பண்ணைகளையும் உள்ளடக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளதாக மோடி கூறினார்.

Leave a Reply