விவசாய கடன்களை தள்ளுபடிசெய்ய வேண்டும், காவிரி மேலாண்மை அமைக்கவேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை மத்திய நிதி மற்றும் உள்துறை அமைச்சர் அருண் ஜெட்லியிடம் விவசாய சங்கதலைவர் அய்யா கண்ணு மற்றும் அதிமுக அமைச்சர் தம்பிதுரை ஆகியோர் மனுவினை அளித்தனர்.

கடந்த 7 நாட்களுக்கு மேலாக டெல்லி ஜந்தர்மந்தரில் தமிழக விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்திவருகின்றனர். இவர்களது போராட்டை கைவிடக் கோரி பல்வேறு அரசியல்பிரதிநிதிகள் பேச்சுவார்த்தைகள் நடத்தினர். இந்தபோராட்டத்தில் சுமுக தீர்வு காண அதிமுக அமைச்சர் தம்பிதுரை மற்றும் விவசாயிகள் இன்று மத்திய அமைச்சர் அருண்ஜெட்லியை சந்தித்து கோரிக்கைமனு அளித்தனர்.


அந்த மனுவில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சியால் தங்களுக்கு விவசாயம் பெரிதும் பாதித்து ள்ளதால் தனியார் வங்கியில் தாங்கள் வாங்கியகடனை தள்ளுபடி செய்யவேண்டும், காவிரி மோலாண்மை குழு அமைக்க பரிந்துரைக்க வேண்டு மென்றும் இந்தியாவில் நதிகளை ஒன்றிணைத்து வறட்சியால்வாடும் அனைத்து விவசாயிகளின் குறை தீர்க்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தனர்.

இந்தகோரிக்கை மனுவினை ஆராய்ந்து விரைவில் அதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாக மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்துள்ளதாக கூறினர்.

Leave a Reply