கிராமப்புறங்களில் வீடுகட்டுவதற்கு ரூ.2 லட்சம் வரையில் பெறும்கடனுக்கான வட்டியில் மானியம் வழங்கும் புதியதிட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.

பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் செவ்வாய்க் கிழமை நடைபெற்றது.

இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், 'நாடு முழுவதும் கிராமப்புற வீட்டு வசதியை ஊக்குவிக்கும் புதியதிட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. வீட்டு வசதியை ஏற்படுத்தும் வகையிலும் இத்துறையில் வேலை வாய்ப்பை அதிகரிக்கும் வகையிலும் இந்தமுடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கிராப்புறங்களில் புதிதாக வீடுகட்டுதல் அல்லது பழையவீட்டை சீரமைத்தல் ஆகிய பணிகளுக்காக ரூ.2 லட்சம்வரை பெறப்படும் வீட்டுக்கடன் வட்டியில் மானியம் வழங்கப்படும். அதே நேரம் பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதி திட்டத்தின் (பிஎம்ஏஒய்-ஜி) கீழ் ஏற்கெனவே பயனடைந்தவர்களுக்கு இதுபொருந்தாது.

இந்தத்திட்டம் ரிசர்வ் வங்கியின் துணை அமைப்பான தேசிய வீட்டுவசதி வங்கியின் (என்எச்பி) மூலம் செயல்படுத்தப்படும். வீட்டுக்கடன் பெறும் வாடிக்கையாளர் சார்பில் 3 சதவீத வட்டியை மத்திய அரசு என்.எச்.பி-க்கு செலுத்திவிடும்.

பின்னர் வாடிக்கையாளர் கடன்பெற்றுள்ள வங்கிக்கு என்எச்பி இந்தத்தொகையை அனுப்பி வைக்கும். இதனால், வாடிக்கையாளர்களின் மாதாந்திர தவணை கணிசமாகக் குறையும்' என்று அந்தச் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply